Saturday, March 11, 2006

எனும் நண்பர்களே.....


எம்.ஆர்.டி பயணங்களில்
உட்கார இடமிருந்தும்
நிற்கும் என்னை
உற்றுப் பார்ப்பதேன்
மனிதர்கள்?
நிற்பது பிடிப்பவர்கள்
நிற்கலாம்தானே?

ஞாயிற்றுக்கிழமைகளில் -
தேக்காவீதிகளை
தேய்ப்பதும்..
ஆர்ச்சர்ட் ரோட்டை
அளப்பதும்..
திரையரங்கு வாசலை
மொய்ப்பதும்தான்..
இளமையின் அடையாளமா?
உறக்கம் பிடிப்பவர்கள்
உறங்கலாம்தானே?

இளமையில் காதல்
அவ்வளவு அவசியமா?
பெண்மீது
பூப்பதுமட்டுமா காதல்?
சன்னலில் கிளைகள் நீட்டும்
இளம்பச்சை மரத்தின் மீது
என்னுள்ளே பூப்பதற்கும்
இந்தப் பெயர்தானே?

நீங்கள் நீங்களாய்
இல்லாமல் இருக்கலாம்...
நான் நானாய்
இருப்பது தவறா
?

4 comments:

சிங். செயகுமார். said...

சின்னதொரு சந்தோஷம்
நாளெல்லாம் உழைத்து
நலிந்த களைப்புக்கு
தெரிந்த மனிதர்
அறிந்த உறவினர்
அவர் முகம் பார்த்தாலே
அகம் பொங்குதே சந்தோஷம்

பெற்ற தாய்
பிறந்த மண்
வாழ்ந்த பூமி
வளர்ந்த பள்ளி
தொலைத்த காதல்
தூரத்து முத்தம்
எல்லாம் ஒரு முகமாய்
இன்றும் நிழலாய்
இந்த யுஷூன் தியேட்டரில்

பிறந்தோம் சிறு துணியில்லாமல்
போய் சேர்வோம்
கழுவிய மீனாய்
பாழும் உடல்
இந்த பூமிக்கு பாரமானதால்

இதற்கிடையில் அரிதாரம் இலா நடிப்பே
தேக்கா வீதிகளும்
தியேட்டர் வாசலும்
ஆர்ச்சார்ட் வீதிகளும்

தூக்கம் இல்லையே
துணையென அவள் ஊரில்
எண்ணிய நாட்கள்
இதே பொழுதுகளாய்
என்று தனியும் இந்த தாகம்!

இப்னு ஹம்துன் said...

மனசைத் தொட்ட கவிதை. அருமை.

பாலு மணிமாறன் said...

Thank You Jeyakumar, Sivanadiyaar & Ifnu!!!

பாலு மணிமாறன் said...

Thank You Jeyakumar, Sivanadiyaar & Ifnu!!!