Tuesday, July 19, 2005

இடைவெளிகள்

கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும்
இடைவெளிகள் நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம் நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டுஅமர்கிறது
கெளரவக் காதல்.

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!

5 comments:

அன்பு said...

மீண்டும் ஒரு நல்ல கவிதை. அருமையான கருத்துக்கள்...

ஒ ரு ச ந் தே க ம்...

கா த ல்
அ ல் லா த
க வி தை
ம ட் டு மே
எ ழு து வீ ர் க ளா!?
அ ல் ல து
ச ற் றே
இ டை வெ ளி
வி ட் டா...?

வசந்தன்(Vasanthan) said...

ம். ஆனா இவ்வளவு நீண்ட இடைவெளி கூடாது.
தொடர்ந்து எழுதுங்கள்.

Ramya Nageswaran said...

சிங்கை நண்பர்கள் இடைவெளிக்கு பின் படத்தை போட ஆரம்பிச்சுடாங்க! பின் பாதி நல்ல ஆரம்பம். தொடர வாழ்த்துக்கள்!

Vijayakumar said...

"நட்பின் பெரிய இடைவெளியை
சினுங்கும் தொலைப்பேசியில்
நிகழும் உரையாடலின் நீளம் சொல்வதுண்டு"

அய்யோ! உங்களிடம் தொலைபேசியில் உரையாடி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.

பாலு மணிமாறன் said...

Thanks to Anbu, Ramya, Vasanthan and Vijay... i have typed a detailed reply to u all , but i dont know how it went missing ...

Anyway , i love to say that i am moved by all your kindness and concern...Thanks again