Friday, April 28, 2006

2007 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா?

இன்னும் நாள் இருக்கிறது...ஆனால் அது கண்மூடித்திறப்பதற்குள் ஓடிவிடும். எனவே இப்போதே ஜோசியம் சொல்லுகிறேன் ... எங்கம்மா மகமாயி ஜக்கம்மா என் கனவில் சொல்லி விட்டாள்... 2007 கிரிக்கெட் உலகக் கோப்பையை ஜெயிக்கப் போவது இந்தியாதான், இந்தியாதான், இந்தியாதான்!

அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய் என்றால், அதற்கான காரணங்கள் பின்வருமாறு ( இதையெல்லாம் ஜக்கம்மா கனவில் சொல்லவில்லை. நாமா கணிச்ச விஷயம்) :


A. வலுவான பேட்டிங்

பேட்டிங்கில் இந்திய அணிதான் தற்போது உலகின் சிறந்த அணி என்று தைரியமாகச் சொல்லலாம். Its a nice mixture of youth and experience . Experienceக்கு திராவிட், சச்சின், சேவாக், கயி·ப் Youthற்கு தோணி, யுவராஜ், சுரேஷ் ரய்னா மற்றும் உத்தப்பா. மற்ற உலக அணிகளைப் பார்த்தால் இந்த nice blend கிடையாது. அப்படியே இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு, 'பூட்ட கேஸாக' இருக்கிறது. இந்த இந்திய வரிசைக்கு சரியான போட்டி கொடுக்கக்கூடியது ஆஸ்திரேலியாதான். ஆனால் ஆஸ்திரேலியாவைக் பொறுத்தவரை when it plays well, it plays really well. But when it plays bad, it plays really bad. அப்படி அவர்கள் மோசமாக விளையாடும் 2 நாள் தொடர்ந்து அமைந்து விட்டால் போதும், ஆஸ்திரேலியக் கனவுகள் முடிந்துவிடும். If my prediction is not wrong, Australians may not reach even the final.

சச்சினுக்கு இது கடைசி உலகக்கோப்பை.So, he will like to sign off in style. அவருக்காகவாவது இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்று மற்றவர்களும் நினைக்கக் கூடுமென்பது ஒரு கூடுதல் அனுகூலம். எனக்கென்னவோ சமீபத்தில் சரியாக விளையாடாதற்குகெல்லாம் சேர்த்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பையில் வெளுத்துக் கட்டுவார் என்று தோன்றுகிறது. சச்சின்-சேவாக் ஓபனிங் இறங்கும்போது, ஒருவர் விட்டாலும் மற்றவர் அதிரடிப்பார் என்ற கிலி மற்ற அணிகளுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதில் சற்று சறுக்கினாலும் The Wall மேலும் ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வார்.

யுவ்ராஜ்சிங் முழுமையான கிரிக்கெட்டராகத் தன்னை உருமாற்றிக்கொண்டு வருடம் ஒன்றாகிறது. சேப்பல் இந்திய அணி கோச்சானது யுவராஜின் வாழ்க்கையில் நிகழ்ந்த வசந்தம். பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் 10 பந்துகளில் அவர் 20 ரன்களுக்குமேல் குவித்த விதம் He is the man for the occation என்று உணர்த்தியது. 2007ம் ஆண்டு உலகக்கோப்பை அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சமாக இருப்பினும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ரய்னா சற்று சிரமப்படக்கூடும் - ஆனால், முக்கிய கட்டங்களில், முக்கியமான ரன்களை எடுக்கிற ஆசாமியாக அவர் இருப்பார். கயி·பைப் பற்றி கணித்துச் சொல்ல முடியாத காலகட்டமிது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் அவர் சீக்கிரமே Formக்கு வருவது அவருக்கும், இந்திய அணிக்கும் நல்லது. தோணிதான் தற்போதைய சூப்பர் ஸ்டார். ஆனால் கடைசி சில போட்டிகளில் அவர் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. உலக அணிகள் அவருக்கான வியூகத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி அவர் ஜெயிப்பார்... The reason why is , he is a superstar with freshness, rawness & ruggedness.

இந்தியக் கிரிக்கெட்டில் கங்கூலியின் கடைசி அத்தியாயம் எழுத்தப்பட்டு விட்டது என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு போராளிக்கு இன்னும் கூடுதல் மரியாதையோடு விடைதரப்பட்டிருக்க வேண்டுமென்று மனசு சொல்கிறது. Irfan Pathan may surprise everyone with his MORE THAN EXCELLENT batting. Expect for this unexpected thing to happen.


B. தரமான பெளலிங்

இர்பான் பதான் முதல் 5 ஓவர்களில் விக்கெட் எடுப்பது எப்படி என்ற வித்தையை கற்று வைத்திருக்கிறார். ஆனால் வேகம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்த வேகம் வெஸ்ட் இண்டீஸில் எடுபடுமா என்பது வரும் தொடரில் தெரிந்து விடும். But he is a clever cricketer and in the words of coach chappel "most improved cricketer" in the Indian team. ஸ்ரீஷாந்த் - இந்தியா கண்டெடுத்திருக்கும் புதிய தங்கவாத்து என்கிறார் இன்சமாம். இது- விக்கெட் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கிறது. மட்டையை தொடாமல் சென்று விடும் outswingerஐ வீசியதும் " என்னா மாமு, இதைகூட அடிக்க முடியல...நீயெல்லாம்..." என்பது மாதிரி அவர் பேட்ஸ்மேனைப் பார்க்கும் பார்வை சமீபத்திய சுவாரஸ்யம். இவர் வெஸ்ட்இண்டீஸில் ஜொலிப்பார்.

முனா·ப் படேலிடம் வேகம், விவேகம் இரண்டும் இருக்கிறது. ஆனாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குத் தேவையான ஏதோ ஒன்று அவரிடம் மிஸ்ஸிங். என்ன அது? ம்... யோசிக்கணும். அதற்கு ஆர்.பி.சிங் பரவாயில்லை. பந்து பவுண்டரிக்குப் போனாலும் சரி... சிக்ஸருக்குப் போனாலும் சரி, ஒரே மாதிரி பார்வை, ஒரே மாதிரி bodu language , ஒரே மாதிரியான பந்து வீச்சு. I feel that as a third seamer in the team, he is going to be a key player. அகர்கார் எல்லா வருடங்களையும் போல் 2007லிலும் இந்திய அணியில் இடம் பெற்று டிரிங்ஸ் கொண்டு வருவார் என்று நினைக்கிறேன்.

ஸ்பின் பெளலிங்கில் சபாஷ் சரியான போட்டி. ஹர்பஜனா, ரமேஷ் பவாரா? இரண்டு பேருமே போராளிகள். பேட்டிங், பெளலிங் மற்றும் ·பீல்டிங்கில் (அபுதாபியில், தொப்பை தேய ரமேஷ் பவார் டைவ் அடித்த காட்சி இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது) ஏறக்குறைய equal. ஆனால் ஹர்பஜன் ஒரு புள்ளி கூடுதல் பெற்று அணியில் இடம் பெறக்கூடும். சில போட்டிகளில் இருவருமே விளையாடக்கூடும். யுவராஜ், சேவாக், டெண்டுல்கர் தேவைக்கடும் நேரங்களில் கைகளைச்சுற்றுவார்கள்.


C. மேம்பட்ட ·பீல்டிங்

விக்கெட்டின் ஒருபுறம் யுவராஜ்சிங், கயி·ப் மறுபுறம் ரய்னா, வேணுகோபால்ராவ் என்பது தரமான ·பீல்டிங்தான். இவர்களில் யாருமே சட்டையில் அழுக்குப்படும் என்று நினைப்பதில்லை. விழுந்து விழுந்து பந்தைத் தடுக்கிறார்கள். திராவிட், சச்சின், ஹர்பஜன், பதான் போன்றவர்கள் safe fielders இனத்தில் சேர்த்தி. சேவாக் சமயங்களில் மாஹாராஜா தானம் கொடுப்பதுபோல் பந்தைத் தடுக்கிறார்...ஆனால் அவர் ஒரு பிச்சைக்காரன் தேங்காய் பொறுக்குவதுபோல் பந்தைத் தடுத்துப் பழகுவது தவிர்க்க முடியாத தேவை. மொத்தத்தில் பார்த்தால், இந்திய அணி no nonsense team when it comes to fieldeing!

ஆகவே, கூட்டிக் கழித்துப் பார்த்ததில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கான எல்லா சத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன. ஜக்கம்மா வேறு கனவில் சொல்லி விட்டார். நாட்டுப்பற்று வேறு "அப்படித்தான் நடக்குமுன்னு சொல்லு" என்கிறது... எனவே என் இனிய இந்திய மக்களே 2007 உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான், இந்தியாதான்! அதைப்பார்த்து ஜொள்ளப்போவது இந்திய மக்கள்தான், மக்கள்தான் என்று கூறி முடிப்பதற்கு முன் கடைசியாக ஒன்று... என்னவென்றால்...

நான் கூறியது நடந்து விட்டால்...

நடந்து விட்டால்...

தமிழ்மணம் மக்களெல்லாம் சேர்ந்து குறைந்தது 10 பவுனில் எனக்கொரு தங்கச்சங்கிலி செய்து போட்டு விடுங்கள். ஒருவேளை நான் கூறியபடி நடக்காவிட்டால்...

நடக்காவிட்டால்.....

நடக்காவிட்டால்....





5 பவுனில் தங்கச்சங்கிலி செய்து போட்டால் போதும்!

9 comments:

Bharaniru_balraj said...

கேட்டுப்பாத்துட்டேன். இரும்புப்கடையிலெல்லாம் பவுன் கிடையாதாம். கிலோ தானம்.

பரஞ்சோதி said...

அருமையான பதிவு பாலா, நன்றாகவே எழுதியிருக்கீங்க.

10 பவுனில் ஒரு பவுன் நான் போடுகிறேன்.

5 பவுனில் ஒரு பவுன் நான் எடுத்துக் கொள்வேன் :)

உங்க வாக்கு பொன்வாக்காகட்டும்.

அன்புடன்

பரஞ்சோதி

பாலு மணிமாறன் said...

பால்ராஜ்... உங்க வீட்டை நினைச்சா பாவமா இருக்கு... அங்கேயும் இதே answerதானா?

:))))

பாலு மணிமாறன் said...

உங்கள் கணக்கைப் பார்த்ததுமே கொஞ்சம் குழம்பிட்டேன் பரஞ்சோதி.

ஆக இந்தியா ஜெயிச்சா உங்கள் மூலம் 1 பவுன் உத்திரவாதம்...அப்படித்தானே?

:)))

ப்ரியன் said...

பாலு இதே "ப்ர்மில்" தொடர்ந்தால் இந்தியா கண்டிப்பாக நிச்சயம் 2007 உலக கோப்பையை எளிதாக வென்றெடுக்கும்

Sivabalan said...

Be prepared to see the phots of The Wall Dravid holding the world Cup.

All the best to Indian Team!!

Good Blog.

பாலு மணிமாறன் said...

Nandri Priyan

பாலு மணிமாறன் said...

Thank you siva... All indians wil hope to see Dravid holding the trophy !

மாயவரத்தான் said...

ஆஸ்திரேலியா விளையாட தடை விதிச்சிடுங்க. பைனல்ஸிலே இந்தியாவோட மோத பாகிஸ்தான் வந்திடனும்னு சொல்லிடுங்க. அப்புறம் என்ன... 'கமான் இந்தியா..'.. உலகக் கோப்பை நமக்கு தான்.