
புரிதலைப் பற்றி
பேசலாம் வா
புரிதல் ஒரு செயல்..
இதில் பேச என்ன இருக்கிறது?
எல்லாச் செயலும்
புரிந்து விடுகிறதா என்ன?
புரிதல் பற்றி ஒரு தேடல்
தேவையெனத்தானே
சில விஷயங்கள்
புரியாமலிருக்கின்றன...
புரியக்கூடிய சங்கதிகளை
புரியாமல் ஆக்குவது
அப்படியென்ன
அவசியம்?
புரியாதவற்றை
புரிய முனைவதில்
அப்படியென்ன
சோம்பல்?
இது வேக உலகம்
இங்கு தேடலுக்கு நேரமில்லை.
இது தேடல் உலகம்...
பெண்ணை
பொண்ணை
சாமியிடம் ஆசியை
ஜோதிடத்தில் வாழ்க்கையைத்
தேடியபடிதானே இருக்கிறது?
நீ பேசுவது புரியவில்லை
சரி..ஒப்புக் கொள்கிறேன்..
புரிதல் பற்றி
பேசலாம் வா
4 comments:
http://www.dinamalar.com/2006feb05/flash.asp
congrads.
Nandri " Anonymous " Nanbarey !!!
புரிய வில்லை!
எனக்கு எதுவும் புரிய வில்லை
கவிதை எனக்கு புரிய வில்லையா?
கவிதைக்கு என்னை புரிய வில்லையா?
புரிதல் எல்லோர்க்கும் அவசியமா?
அவசியபட்டால்தான் புரியனுமா?
புரியாமல் போனால்தான் கவிதையா?
புரியாத கவிதைதான் புனைந்தவனுக்கு பெருமையா?
உனக்கு எழுதிவிடும் சாத்தியம்
எளிதில் கை கூடுகிறது
ஏதோ எனக்கு
அங்கொன்றும் இங்கொன்றும்
இரண்டு வரி புரிகிறது
இதனாலோ என்னவோ
உன் கவி பக்கம்
என கால்கள்
ஓரம் காட்டியே
ஓடி போகிறது
என் மனம் மட்டும் உன்னை சுற்றியே!
Nice Comments Jeya...
Hope i can write a kavithat that is easily understandable :)))))
Post a Comment