ஒரு தமிழ் நிகழ்வு
ஒரு ரயில் வண்டி பயணத்தின் அவன் முதுகும், அவளின் ஒரு ஓர முகமும்கதவொட்டிய கண்ணாடி தடுப்பிற்குப் பின்அமர்ந்துநின்றுஓரம் சாய்ந்துஇன்னும் பல நிலைகளில்பல இன முத்தங்களைப்பார்க்க வாய்க்கிறதுரயில் பயணத்தில்நாளிதழ் பொருளாதாரம் வருடியகுறும் பை விலக்கி தொலைபேசியஅவரவர் வாழ்க்கை மத்தியில்நான் பார்க்க அவள் விழியில் துளிர்க்கிறது ஒரு துளி நாணம்நொடியில் நாகரிக விழிகள்அவள் விலக்கி விளம்பரம் பார்க்கஅந்த ரயில் வண்டியின் சீரிய ஓட்டத்திற்கிடையில்நிகழ்ந்து கொண்டிருந்ததுஒரு 2006ன் தமிழ் முத்தம்!
6 comments:
கண்டேன் அந்த காட்சி
கன்னியும் காளையும்
கைகோர்த்து மெய்யோடு மெய்யாய்
கண்கள் மட்டும்
கடும் நித்திரை போல
சுற்றம் மறந்து
கற்றதெல்லாம் அதுதான்
காண்பீர் மக்களே
காட்சிதனை கடை விரித்து
இளம் நெஞ்சமதை
என்னை என்னவோ செய்கிறதே!
அவசர உலகில்
நெரிசலில் நிற்கும் வேலையில்
கட்டணமின்றி காட்சிகள்
நான் மட்டும் இருக்கையில்
விதிபயனென்று விழியிடுகிறேன்
கையோடு மனைவியோ
கூட பொறந்தவளோ இருக்கையில்
கொஞ்சம் மனம் கனக்கிறது
இவர்களுக்கு இதற்கெல்லாம்
வேறு இடம் இல்லையா?
எனக்கு இருக்கும் நாணம்
எதிரே இருக்கும் ஜோடிக்கு இல்லையே!
ஓ! இதுதான் காதலா!
காதல் வந்தால் சுற்றம் மறக்குமோ!
என் விதி எனக்கும் அது வாய்க்கலையே!
வணக்கம் மணி..
கவிதைக்கான கரு நன்று.
ஆனால்
சொல்லப்பட்ட விதம் தான்
சுற்றி வளைத்து மூக்கை தொட்ட கதையாகிப் போனதோவென யோசிக்கிறேன்.
மொழியின் அடர்த்தி..
நமது படைப்புக்கு சான்று.
அதே சமயம்.. படைப்பின் இறுக்கம்...
நமது மொழியின் பலவீனம்.
உணர்க...
வழ்த்துக்களுடன்
தோழன்
பாலா.
சில்மிஷ கவிதை...
"துளிர்க்கிறது ஒரு துளி நாணம்
ஒரு 2006ன் தமிழ் முத்தம் "
துளிநாணம் உணர்த்துகிறது காலம். நன்று பாலா !
சிங்.ஜெயக்குமார் - உங்கள் விமர்சனமே ஒரு கவிதையாகி விடுகிறது. அதை அப்படியே உங்கள் வலைப்பூவில் பதிந்து விடலாம்!
பாலபாரதி - உங்கள் விமர்சனத்தில் தெரிகிற நேர்மை யோசிக்க வைக்கிறது, யோசித்துக் கொண்டிருக்கிறேன்.....
தேவ் - சில்மிஷத்தைப் பற்றிய கவிதைன்னுதானே சொல்றீங்க ? ;))))
நவீன் - நாணம் என்பது துளியாவது இருக்கிறதே என்ற சந்தோஷத்தின் வெளிப்பாடுதான் அந்தக்கவிதை!
உங்க ஆசைப்படியே என் பதிவில் போட்டுட்டேன்
Post a Comment