Saturday, February 11, 2006

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்குமார்



"பட்டாம்பூச்சி விற்பவன்" என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலக இதயங்களை வாங்கியவர் கவிஞர் நா.முத்துக்குமார்.

வாழ்க்கையை மனசுக்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்தி, நேசிக்கச் செய்யும் படைப்புகளைத் தரும் நேர்த்தி தெரிந்தவராக நாம் இவரை அடையாளம் கண்கிறோம்.

கவியரசு வைரமுத்துவிற்கு அப்புறம் வந்த திரைப்படப் பாடலாசிரியர்களில், எழுதுகிற பாடலெல்லாம் கவிதையாக இருக்க வேண்டுமென்ற கவனம் இவரிடம் அதிகம் இருப்பதைப் பார்க்கலாம்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ் வானொலியான ஒலி 96.8, 2004,2005ம் ஆண்டுகளின் சிறந்த பாடல்களாக இவரது பாடல்களை தேர்ந்தெடுத்திருப்பது ( மக்கள் வாக்களிப்பின் மூலம் ) அதற்கு அத்தாட்சி.

இம்மாத இறுதியில் சிங்கப்பூர் வருகிறார் நா.முத்துக்குமார். இவரது கவிதை முக அறிமுகத்திற்கு & முதல் அறிமுகத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறது சிங்கப்பூர்!

7 comments:

நண்பன் said...

பாலு மணிமாறன்,

துபாய்க்கு வருவதாக இருந்தவர் சிங்கப்பூருக்கு வந்து விட்டார்.

சந்திப்பு தள்ளிப் போனது வருத்தமே.

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

அன்புடன்
நண்பன்

பாலு மணிமாறன் said...

நன்றி நண்பரே...

நானும் துபாய் நிகழ்வு பற்றி கேள்விப்பட்டேன். சீக்கிரமே அது நிகழ்ந்தேற என் வாழ்த்துக்கள்.

திரைப்படங்களில் தமிழ்க்கவிதையை வாழவைக்க ஆரவாரமற்றுப் பணியாற்றும் கவிஞர் நா.முத்துக்குமார் போன்றவர்களை வரவேற்று கருத்துப் பறிமாறவும், கவிதை பறிமாறவும் உலகமெல்லாம் சிதறிக்கிடக்கின்ற தமிழர்கள் தாகமாய் இருக்கிறார்கள் என்பதை உங்கள் பின்னூட்டம் உணர்த்தியது.

நன்றி!!!

சிங். செயகுமார். said...

கவிஞரை காண எனக்கு கோடி சந்தோஷம்!

மதுமிதா said...

தேசிய நூலகத்தில் சந்திப்பு சிறப்பாக நடக்கட்டும் பாலு மணிமாறன்.
ஆராவாரமற்ற,எளிமையான,உழைப்பை நேசிக்கும் மனிதர்.
பணிகளுக்கிடையே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பணியாற்றச் சொல்லுங்கள்.

நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நிகழ்ந்ததா?

பாலு மணிமாறன் said...

கோடி சந்தோஷம் பெற 25ம் தேதி வரை பொறுத்தால் போதும் சிங்.ஜெயா!

கண்டிப்பாக உங்கள் கவலையை கவிஞரிடம் சொல்கிறோம் மதுமிதா. சிங்கப்பூரில் அடாது பெய்த மழைக்கு மத்தியிலும் விடாது வந்திருந்த கூட்டத்தால் நூல் வெளியீடு சிறப்பாக அமைந்தது.

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகமெங்கும் வீசாதா..

விட்டு விட்டு (பெய்யும்) தூறல் வெள்ளமாக மாறதா.

தனுஷின் பாத்திரத்தின் ஏக்கத்தை இதைவிட கவித்துவமாய் சொல்லமுடிய்மா என்ன?

வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது அதன்வண்ணங்கள் மட்டும் எந்தன் நினைவோடு உள்ளது...

அருமையான கவிஞர். என் சார்பில் ஒரு பாரட்டு வையுங்கள்.

மின் அஞ்சல் முகவரி கிடைத்தால் சொல்லுங்கள்.

பாலு மணிமாறன் said...

Sure Syril...

Indeed he is a wonderful poet.

In my view, if you want list someone next to Vairamuthu's name - I will suggest Naa Muthukumar's name.