Friday, February 24, 2006

கதவின் சில ஜன்னல்கள்


சில நிமிடங்களுக்கு ஒருமுறை
வந்துபோகும்
ரெயிலென
வந்துபோகும் உன் நினைவுகள்....

ஒவ்வொரு முறையும்
நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.

உட்கார்ந்தோ, நின்றோ...
கர்ப்பிணிப் பெண் அல்லது
முதியோருக்கு இடம் தந்தோ...

சமமாக சாலைகளில் ஓடி
ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் வாகனங்களை
பார்வையால் பிசைந்தபடியோ...

அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.

இன்னும் சிறிது நேரத்தில்
ஏதேனும் ஆங்கிலக் குரலில்
வந்துவிடலாம்
நானிறங்கும் 'அடுத்த நிறுத்தம்'.

இம்முறை
வழக்கம் போல்
நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி
நானும் இறங்கிக் கொள்வேன்...

போகும் ரெயிலின்
மூடிய கதவுகளுக்குப்பின்
போகும் நம்மை பார்த்தபடி
நடந்து போகலாம் நாம்!

7 comments:

- யெஸ்.பாலபாரதி said...

ம்
ம்
ம்
யாருங்க அந்த அம்மணி...
நல்ல படிமம்.
இன்னும் வார்த்தைகளைச் சுருக்கினால்
சிறப்பாக இருந்திருக்கும் என்பது இந்த சின்னவனின் கருத்து.

கி.வினோத் said...

மிகவும் பூடகமான, பொதுவான ஒரு கவிதை.
அருமை...தொடரட்டும் இப்பணி!
-கி.வி.
http://siragugalinniram.blogspot.com

Unknown said...

You are tagged check my blog
http://chennaicutchery.blogspot.com/2006/02/blog-post_25.html for further details

அனுசுயா said...

«Õ¨ÁÂ¡É ¸Å¢¨¾ À¡Ã¡ðÎì¸û

பாலு மணிமாறன் said...

நன்றி யாழிசைச்செல்வன்.

வார்த்தைச் சிக்கனம் பற்றி உங்களைப் போலவே நிறையப்பேர் என்னிடம் அக்கறையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாங்குகிற சம்பளத்தையே சிக்கனமாக செலவளிக்காத எனக்கா வார்த்தைச்சிக்கனம் வந்து விடப் போகிறது? முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.........

பாலு மணிமாறன் said...

இல்லாத அம்மணிகளை நினைத்துப் பூடகமாகப் புலம்புவதுதானே கவிதைகளில் வேலை? நானும் அந்த வேலையைச் செய்ய " முயன்றிருக்கிறேன்" .. நீங்கள் கேட்டுக் கொண்டபடி இன்னும் தொடர்வேன் கி.வி!

பாலு மணிமாறன் said...

அய்யோ.. என்னையும் tag பண்ணீட்டிங்களா dev?

நன்றி அனுசுயா!