Saturday, July 23, 2005

அலையில் பார்த்த முகம்

ஒரு மழைநாளின் மனிதச்சகதியில்
நடக்கிறது மண்.

அதிகாலை பூஜையின் பாடலுக்கு
அவரால் வாசிக்கப்படுகிறது
ஒரு ஆர்மோனியப்பெட்டியும்
வீணையும்.
மரியாதானே உன்பெயர்?

கிணற்றின் இருள் மறைவில்
கருத்தப்பாண்டியின் மேகம்
அவனினின்று
காற்றாகிறது.

துவைத்து உலர்கிறது துணி.
கொங்கை குலுங்கிய ராணி
வாய் சிவந்து அழுக்காகிறாள்.

ஆற்றிலும் வருகிறது அலை
ஒவ்வொரு முறையும்
இழுத்துச் செல்கிறது ஏதேனும்.

3 comments:

Ramya Nageswaran said...

பாலு, எனக்குப் புரியலை. அதனாலே நிச்சயம் நல்ல கவிதையாகத்தான் இருக்கும்! :-)

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

@ ramya & Balu

: ))))))))))))

anbudan, Jayanthi Sankar

பாலு மணிமாறன் said...

:))) @ Ramya, J .

Nadri Moorthi !