வெற்று வெளி
நேற்று மரத்தடியில்
நிழல் மட்டுமே
நின்றது

அம்மர நிழலில் நீயும் ஓர்நாள்
நின்றிருந்ததாய்
ஒரு கவிதை
ராஜகுமாரக் கனவுகளில்
மெல்ல நீ அழிந்தததாயும்
ஒரு கவிதை
இரண்டு கவிதையிலும்
எழுதியவன் பெயரில்லை
இருந்ததே தெரியாது
அழிந்ததை அறிவேனா?
இன்றும்
அம்மரத்தடியில்
நிற்கிறது நிழல் மட்டும்!
3 comments:
Nice
வணக்கம் பாலு...
கவிதை மிகவும் நன்றாக உள்ளது
இது கனவில் வந்த கற்பனையா?
அல்லது கற்பனையில் வந்த கனவா..?
அவள் ஒரு கற்பனை. அவள் ஒரு கனவு. இது அவளால் வந்தது - அவளுக்காக எழுதப்பட்டது!!!
Post a Comment