சிங்கப்பூர் நகைச்சுவை எழுத்தாளர் இமாஜானின் 30 நூல்களை மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு செய்தது.
எனது கவிதைத் தொகுப்பு "அலையில் பார்த்த முகம்" கடந்த ஜனவரியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் வெளியீடு கண்டது. அந்தப் புகைப்படங்களை நட்சத்திர வாரத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் வேறு எப்போது பகிர்ந்து கொள்வது? அதை இங்கு உங்களோடு பகிர்கிறேன்.
கவிஞர் மனுஷ்யபுத்திரனின் "உயிர்மைப் பதிப்பகமும்" சிங்கப்பூரில் இருக்கும் எனது நிறுவனமான "பாலு மீடியா"வும் சேர்ந்து " தங்கமீன் பதிப்பகம்" என்ற இணை பதிப்பகம் துவங்கி சிங்கப்பூர், மலேசிய எழுத்துக்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தரம், கட்டுபடியாகும் விலை, திட்டமிட்டு புத்தகங்களை அதன் மூலம் மலேசிய சிங்கப்பூர் எழுத்துகளை பரவலாக சந்தைப் படுத்துதல் என்பது அடிப்படை நோக்கு. சிங்கப்பூர், மலேசியா என பரவலான எனது வாழ்க்கைப் பயணமும், நட்பும் இதற்குத் துணை சேர்க்கும்.
முதல்படி எடுத்து வைக்கிறோம். எல்லைக்கோட்டை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் எல்லா அடிகளுமே எடுத்து வைக்கப்படுகின்றன. எங்கள் நம்பிக்கையும் அப்படிப்பட்டதுதான்!
இடம் : சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கல்யாண மண்டபம். குறுந்தாடியுடன் இருப்பது எனது சகோதரர் கென்னடி. வெள்ளை சட்டையில் - எழுத்தாளர் மா. அன்பழகன்
பாடகர் : குணசேகரன் நடனமணி :பிரமிளா பாடல் : வெள்ளிச் சலங்கைகள் ...
நூல் பெறுபவர் : திரு.நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
நூல் தருபவர் : இயக்குனர் இமயம்
வேடிக்கை பார்ப்பவர் : இந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர்
அந்த மாலைக்கு அவர் தகுதியானவர்தான்... "எங்கள் ஊருக்குத்தானே இதுவரை சினிமா வந்திருக்கிறது. அட... இதென்ன எங்கள் ஊர் சினிமாவில் வருகிறதே" என்று 16 வயதினிலே பார்த்து வியந்ததாகக் கூறிய கவியரசு வைரமுத்துவின் வரிகளை இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.. தமிழரின் வாழ்க்கையை செல்லுலாய்டில் பதிவு செய்தவருக்கு அது ஒரு சின்ன மரியாதை! அருகில், தமிழ்ப்புரவலர் : போப் ராஜூ
உலகம் முழுக்க அறிமுகமான அந்த கரகரத்த குரலில் எனது கவிதைக்கான விமர்சனத்தைக் கேட்டதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்!
8 comments:
குட்.. இப்போதாவது பதிவு போட்டீங்களே..
:)
(நட்சத்திரம் ஆனால் தான் படங்களை வெளியிடுவதுன்னு முடிவு எடுத்து இருந்தீங்களா..)
வாழ்த்துக்கள்...
உங்களது முயற்சிகளின் வெற்றிகளுக்கு எனது பாராட்டுக்கள் பாலு !
Nandri selvan ...
Ungalukkum en anbu nandrigal naveen
வாழ்த்துக்கள் ! அப்படியே ஒன்றிரண்டு கவிதைகளையும் எடுத்து விடுவது தானே :)
அந்த கரகர குரலின் வசீகர முதல் வார்த்தை முழங்கும் முன்னே அரங்கத்தின் கரவொலி அடங்க ஆன நேரங்கள் நெஞ்சினில் நிழலாடுகின்றன.
I will blog few kavithaigal soon Manian... Thank you !!!
Thanks for being there in the event sing.jeya !!!
Post a Comment