1. சரியான தயாரிப்பில்லை
மற்ற நாடுகளின் கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பைக்குத் தங்களை முழுமையாக தயார் செய்து களமிறங்கிய நிலையில், இந்திய அணி கடைசி நிமிடம் வரை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. "எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்கிறோம்" என்று காரணம் சொன்னார் சேப்பல். அப்படி வளர்த்தத் திறன், பங்களாதேஷை தோற்கடிக்கக்கூட பயன்படவில்லை என்பது பெரிய சோகம்.
2. எதிரணியை குறைத்து மதிப்பிட்ட குற்றம்
இந்த உலகக்கோப்பையில் பங்களாதேஷ் ஒரு அபாயகரமான அணியாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருந்தார்கள். ஆனால்,"பங்களாதேஷ்தானே..ஜெயித்து விடலாம்" என்ற ஏளன மனப்போக்கு அனுபவமிக்க இந்தியா பேட்ஸ்மேன்களிடம் இருந்தது. அதற்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய விலை - தோல்வி!
3. அள்ளி வழங்கிய உபரி ரன்கள்
நூறு போட்டியில் விளையாடிய அனுபவம், இருநூறு போட்டியில் விளையாடிய அனுபவம் என்று பெருமைப்பட்டு என்ன பயன்? இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டியில் 16 உபரி ரன்களை வாரி வழங்கினார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள். அதை கட்டுப்படுத்தியிருந்தால், 220 ரன்களில் இலங்கை அணியை சுருட்டி இருக்க முடியும்.
4. டெண்டுல்கர் என்ற கேள்விக்குறி
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கரா? அல்லது லாராவா ? என்ற கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள் - லாரா என்று. தனது அணி ஜெயிக்க வேண்டிய அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழலில் சிறப்பாக விளையாடுபவர்தான் சிறந்த பேட்ஸ்மேன். டிராவிட், இன்சமாம், வாவ், லாரா போன்றவர்கள் இந்த இனத்தில் சேர்த்தி. யோசித்துப் பாருங்கள் - டெண்டுல்கர் ஜெயித்துத் தந்த முக்கிய போட்டிகள் எத்தனை?
5. உத்தப்பா என்ற பலவீனம்
உலகக் கிரிக்கெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புத் திறமைகள் இல்லாதவர்கள் கூட பெயர் போட்டுவிட முடியும். ஆனால் பலவீனமுள்ளவர்களால் அது முடியாது.அவர்களது பலவீனத்தை எதிரணிகள் இரக்கமே இல்லாமல் தொடர்ந்து தாக்கி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவதே அதற்குக் காரணம். உத்தப்பாவின் பலவீனம் விக்கெட்டுக்கு சற்று வெளியே விழுந்து எகிறும் பந்து.
6. செத்த பாம்பை அடிப்பது வீரமா?
கடந்த சில மாதங்களாகவே இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக இருந்தவர் வீரேந்திர சேவாக். இந்த உலகக்கோப்பையிலும் அந்தத் தலைவலி தீர்ந்த பாடில்லை. அதுதான் பெர்மூடா அணிக்கு எதிராக சதம் அடித்தாரே என்றால், அதே சதத்தை இலங்கை அல்லது பங்களாதேஷிற்கு எதிராக அடித்திருக்க வேண்டியதுதானே? செத்த பாம்பை அடிப்பதா வீரம்?
7. தோல்வியைப் பற்றிய வெட்கமில்லை
இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டி. இந்தியா டாஸ் ஜெயிக்க வேண்டுமென்று படபடக்கிறார் சிவராமக்கிருஷ்ணன். அதிசயிக்கிற மாதிரி ஒரு கேட்ச் அல்லது அதிசயிக்கிற மாதிரி ஒரு ரன் அவுட் என நூறுசதத்திற்கும் மேற்பட்ட திறனோடு இந்தியா விளையாட வேண்டுமென்று சொல்கிறார் ஆஸ்திரேலியரான டீன் ஜோன்ஸ். ஆனால் இந்திய அணியோ, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என்ற தொனியில் விளையாடியது. மிகப்பல வீரர்களிடம், வேகமில்லை, ஜெயிக்க வேண்டுமென்ற வெறியில்லை, தோற்றால் அவமானமே என்ற கவலையுமில்லை. தோற்றதில் கவலையில்லை, தோற்றவிதம்தான் அவமானமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் வெங்கட்ராகவன்.
8. துணி அழுக்காகி விடுமா?
ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இளைஞர்களின் விளையாட்டு. இதில் பந்தடிப்பது, பந்து வீசுவது போன்றே, பந்தைத் தடுப்பதும் முக்கியம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைந்த இந்திய அணியின் ·பீல்டிங் திறன் மிகப்பரிதாபமாக இருந்தது. ரன்களை தடுப்பதைக் காட்டிலும், கீழே விழுந்தால் ஆடையில் அழுக்குப் படும் அல்லது கை,கால் பிசகிவிடும் என்ற கவலையிலேயே பலரும் நடமாடியதை பார்க்க முடிந்தது. இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்படும் முனாப், சேவாக் போன்றவர்கள் கூட ·பீல்டிங் திறனற்றவர்களாக இருப்பது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம்.
9. கை கொடுக்காத அனுபவம்
கங்குலி, டெண்டுல்கர், சேவாக், அகர்கார் போன்றவர்களது அனுபவம் இந்திய அணியை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்ல தவறிவிட்ட நிலையில், அதைப் பற்றி பெருமை பேசி பயனில்லை. அகர்கார் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் போதும். அவரைப் போன்றவர்கள் புதியவர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது. கங்குலி இன்னும் ஒரு வருடம் விளையாடலாம். ஆனால், மரியாதைக்குரிய இன்றைய நிலையில் ஓய்வு பெறுவதே அவருக்கு நல்லது. சேவாக்கை குறைந்த பட்சம் ஒரு வருடமாவது உள்ளூர் போட்டிகளில் விளையாட வைத்து, அப்புறம் இந்திய அணிக்குள் கொண்டு வரலாம். ஒரு தேசத்தை விட எந்த வீரரும் உயர்ந்தவரில்லை. டெண்டுல்கரும் அவரது விளையாட்டைப் பற்றி மறு பரிச்சீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதென்றே தோன்றுகிறது. ஆனால் அவரைப் பற்றிய முடிவுகளை அவரிடமே விட்டு விடுவதே டெண்டுல்கருக்குத் தருகிற மரியாதை.
10. திராவிட் மற்றும் சேப்பல்
1995க்குப் பிறகு இந்தியா வெளிநாடுகளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிடவில்லை என்கிறார் சேப்பல். ஆனால் 1983க்குப் பிறகு இந்தியா இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை என்பதை அவர் உணர வேண்டும். சிறந்த ஆட்டக்காரர்கள் நிறைந்த இந்திய அணியை சூப்பர் எட்டு சுற்றுக்குக்கூட கொண்டு செல்ல முடியாத யாருமே சிறந்த பயிற்றுவிப்பாளராக இருக்க முடியாது - அது கிரேக் சேப்பலாக இருந்தாலும் கூட! திராவிட் புத்திசாலி கேப்டன். இந்த உலகக் கோப்பையில் அவர் சில தவறுகளை செய்திருக்கிறார் ( உதாரணம் : சேவாக் ). ஆனால் அவர் இன்னும் ஓரிரு வருடங்கள் தொடரலாம். எதுவரை என்றால், மகேந்திரசிங் தோனி முழுமையாகத் தயாராகும் வரை!
16 comments:
Postmortem Report is very good. Satisfied. :)
பாலு உங்களின் '2007 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா' என்ற பதிவை இப்போது படித்தேன். என்ன நினைத்திருப்பேன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
Thanks Fast Bowler...இராம வயிரவன்...5 பவுன் செயினோட நீங்க ரெடியா? :)))
Thanks Fast Bowler...இராம வயிரவன்...5 பவுன் செயினோட நீங்க ரெடியா? :)))
பெர்முடா: ஏண்டா ஒரு புள்ள பூச்சிய பொட்டு இந்த அடி அடிச்சிட்டீங்களேடா
இந்தியா: எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சிகிட்டே இருக்கீங்களேடா, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கடா..
திராவிட் ; என்ன இன்சி..? உங்க பயிற்சியாளர் இறந்துட்டாராமே..?
இன்சி ; அவர் மானஸ்தன்.. எங்க டீம் தோத்ததும் உயிரை விட்டுட்டார்..
பெர்முடா கேப்டன் சொல்கிறார் :
மொதல்ல ரெண்டு பேருதாங்க அடிச்சாங்க, அதுல ஒருத்தன் டிராவிட்டுக்கு போன் போட்டு ஃபிரீயா இருந்தா வாடா மச்சான் ஒரு டப்பா டீம் சிக்கி இருக்குன்னு சொன்னான்.
அந்த லூசு இதுதான் சான்ஸ்னு மொத்தம் 11 பேர கூட்டிக்கிட்டு வந்து 3 மணி நேரம் கதறக் கதற அடிச்சாங்க.
சரி அடிச்சுப் போட்டோம்னு விட்டுட்டேன்.
அதுல சேவாக் சொன்னான் " என்னை எல்லோரும் 1 ரன்னுல அவுட் ஆக்கிடுவாங்க, என்னை 100 அடிக்க விட்டு அழகு பார்க்குறாங்க இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடான்னு சொன்னான்டா.................... (ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்)
தோனி: டிராவிட் அண்ணே! வங்காள தேச அணியினர் எங்கே தங்கியிருக்காங்க என்றே தெரியலை. தெரிஞ்சிருந்தால் பேதி மாத்திரை கொடுத்திடலாம்.
டிராவிட் : என்ன பங்காளி, சொன்னம்ல வந்துடுவோம்னு அதுக்குள்ள கிளம்பிட்டீங்க எங்களை விட்டுட்டு????
இன்சமாம் : பங்காளி நெசமாவே நீ மானஸ்தன்தாயா,... சொன்னபடியே வந்திட்ட. இந்தா புடி டிக்கெட்ட....
வா பங்காளிஇஇஇஇஇஇ.................
சேவாக் மகன் : அம்மா! இங்க டி.வி. பாரு அப்பா சிக்ஸ் சிக்ஸா அடிக்குறாரு!
சேவாக் மனைவி : டேய்! மானத்தை வாங்காதடா! அது மேட்ச் இல்ல. Boost விளம்பரம்.
ஒருவர்: ஏன் இந்திய டீம் மாத்திரம் பெரிய பொதிகளை சுமந்து செகின்ரார்கள்?
மற்றவர்: ஓ....! அதுவா? எல்லாம் பெண் ரசிகர் இவர்களை பார்ப்பதற்காக கொடுத்த நேர புத்தம் தான்
(சேவாக் நம்ம கேப்டன் டிராவிட்டிடம் கேட்கிறார்)
அண்ணே! அண்ணே! அடுத்த தடவையும் பெர்முடா கூடவே
விளையாடுவோம்னே?
இதோ பத்தோடு பதிணொன்று: அளவுக்கு அதிகமாக பணத்தொகைக் கொட்டி
தலையில் தூக்கி வைத்து கொண்டாடிவிட்டோம். இந்தியா ஒரு வறுமையான நாடு. வறுமையால் பல இலட்சம் குழந்தைகள் இறக்கும் தேசம். ஒரு வேளை
பட்டினி கிடந்து பாருங்கள். வறுமையின் நிறம் என்ன என்பதை தெருவில் நிற்கும் குழந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள்.
விளையாட்டை விளையாட்டாக எடுங்கள். தோல்வி நிலையில்லை.
புள்ளிராஜா
Dravid is right in one way, the top order batsmen has let us down. Middle order didnt rise up to the occassion in both the matches against Bangladesh and Sri Lanka...
It is unfortunate that two consecutive loses saw both India and Pakisthan eliminated in the initial stages itself. Without prejudices, i would like to say that the World Cup 2007 format has not done enough justice to both these teams. Remember, Pakisthan despite initial reverses was able to rise up in the later part of the tournament in World Cup 1992. India too lost two consecutive matches in 1983 WC, and then followed up with two victories. This time, the time was too short for the teams... had England lost yesterday to Kenya, it would have been distraous for them too. Any how, the complacency on our Indian team members was primarily responsible. Finally, in the case of Ind vs SL, the better team won. In the case of Ind vs BDH, the team that played better won.
பத்து காரணம் கொஞ்சம் அதிகமாக தெரியுது. எனக்கு தெரிந்த ஒரே காரணம் அந்த 11 பேர்கள் தான் !
:)))0
/அண்ணே! அண்ணே! அடுத்த தடவையும் பெர்முடா கூடவே
விளையாடுவோம்னே?
/
இந்த பின்னூட்டம் படிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியலங்க....! நன்றி, அனானி!
/ஒரே காரணம் அந்த 11 பேர்கள் தான் !
:)))0
/
என்னங்க... நம்ம coachயை விட்டுடீங்க? 11 + 1
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்ப வேண்டிய நல்ல பதிவு.
11th Reason:
Instaed of wasting 1 month unneccessarily in West Indies,Indian players can concentrate more time in advertisements and can earn more.So they dont want to waste time by playing matches(apart from earnings from bookies)
சிரிப்பால் வயிற்றை புண்ணாக்கிய அனாவுக்கு நன்றி
அப்ப பத்தோடு பதினொன்னு சொல்றீங்களா கோவி.கண்ணன். தென்றல்சொல்ற மாதிரி 12தான் சரியான கணக்கு
நன்றி விடாது கருப்பு
We can't panic sathukka bootham... there is always next time. Your views are great bharatee
//உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கரா? அல்லது லாராவா ? என்ற கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள் - லாரா என்று. தனது அணி ஜெயிக்க வேண்டிய அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழலில் சிறப்பாக விளையாடுபவர்தான் சிறந்த பேட்ஸ்மேன். டிராவிட், இன்சமாம், வாவ், லாரா போன்றவர்கள் இந்த இனத்தில் சேர்த்தி. யோசித்துப் பாருங்கள் - டெண்டுல்கர் ஜெயித்துத் தந்த முக்கிய போட்டிகள் எத்தனை?//
டெண்டுல்கர்
ரன்கள் ஆட்டங்கள் வெற்றி
0<35 54% 43%
36<49 11% 63.40%
50<99 20% 59.50%
100> 10% 72%
இதே போல் லாராவுக்கு எடுத்துப்பாருங்கள். கண்டிப்பாக இந்த அளவுக்கு இருக்காது. லாரா எத்தணை போட்டிகளில் வென்று கொடுத்திருக்கிறார்? லாரா விளையாடி தோற்ற போட்டிகளே அதிகமாக இருக்கும்.
லட்சுமணனும் திராவிடும் ஒருதடவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்சில் நின்று விளையாடிய பிறகே திராவிட் நன்றாக விளையாட ஆரம்பித்தார். அது வரை இப்போது ஷேவக்கைப் போலவே அப்பொது திராவிடைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதுவரை திராவிடும் இக்கட்டான போட்டிகளில் சிறப்பாக விலையாடியதில்லை.
இன்ஸமும் ஒரளவுக்கே இக்கட்டான போட்டிகளில் சிறப்பாக விலையாடி இருக்கிறார்.
மற்றபடி துணைக்கண்ட அணிகள் அனைத்துக்குமே தோற்க கூடாது என்ற உணர்வும், வெல்ல வேண்டும் என்ற வெறியும் போதுமான அளவுக்கு இல்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி மிதக்கும் வெளி.
டெண்டுல்கர் நன்றாக விளையாடிய போட்டிகளில் இந்தியா ஜெயித்தது என்பதற்கும், தனது அணி ஜெயிக்க வேண்டிய சூழலில் அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாய சூழலில் நன்றாக விளையாடுபவர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா?
Greatness goes largly with performing under pressure
Sorry.. Comment about Tendulkar was given by "Sathukka Bootham"
என் பெயர் மு.உமாசங்கர். எனது பெயரில் கூக்ள் கணக்கு இல்லாததால் அனானியாக வந்தேன்.
தவிர்க்க வேண்டிய கட்டாய சூழலில் நன்றாக விளையாடாதது துணைக்கண்ட வீரர்கள் அனைவருக்குமே உள்ள குணம்.
அந்த மாதிரி சூழலில் நன்றாக ஆடுபவர்கள் ஆஸ்திரேலியர்களும், தென் ஆப்பிரிக்க வீரர்களுமே.
இதில் சச்சினை மட்டும் சொல்லி பயன் இல்லை.
திராவிடும் ஆரம்பத்திலிருந்து அனைவராலும் பாராட்டப்பட்டதில்லை. இனி ரொம்ப நாளைக்கு இவ்வாறு பாராட்டப்பட போவதும் இல்லை. நான் ஒருபோதும் அவரைத் திட்டியதில்லை
நேற்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன். மிகுந்த ஆய்வுகளுக்குப் பிறகு இந்தியாவின் தோல்விக்கான காரனம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. தோல்விக்கான காரணம் இரண்டு பேர்.
முதலாமவர் இந்திரா காந்தி.இவர்தான் பங்களாதேஷ் உருவாக காரணம்.
இரண்டாமவர் அனுமார்.இவர் இலங்கையை முற்றிலும் எரிக்காமல் விட்டதே காரணம்
Post a Comment