Sunday, June 03, 2007

கனிமொழி பற்றி ஒரு மீள்பதிவு

கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பதிவை ஒரு வருடத்திற்கு முன் எழுதியபோது, "சங்கமம்" உட்பட எந்த அரசியல் வெளிச்சமும் அவர் மீது விழுந்திருக்கவில்லை.

சிங்கப்பூரில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு, கனிமொழிக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் " எதுக்கு இந்த வீண் வேலை. அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை" என்று கருத்துரைத்தார்கள்.

எனினும் கனிமொழியின் அரசியல் பிரவேசம் என்பது தாமதப்படும் ஒரு நிச்சயம் என்ற எண்ணம் எனக்குள் (பலரையும் போல்) இருந்தது. கனிமொழியைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது அவசியம் என்ற பேராசையின் வெளிப்படாகவும் அப்பதிவு இருந்தது.

இன்று - அரசியலுக்கான கனிமொழியின் கதவு படாரென்று திறந்து கொண்டது மட்டுமில்லாமல், அவரை ஒரு மாயக்கரம் யாரும் எதிர்பாராத தொலைவுகளுக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், "கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் - 10 காரணங்கள்" என்ற 2006 வருட மார்ச் மாதத்திய பதிவை மீள்பதிவு செய்கிறேன்.


1. இன்றைய தமிழக, இந்திய அரசியலுக்கு புரையோடிப்போன பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்ட புதிய சிந்தனையாளர்கள் தேவை. கனிமொழி - புதுச்சிந்தனையாளர்

2. அரசியலுக்கு வரச் சரியான, இளமையின் உச்ச வயது அவருக்கு. இளமையின் வேகமும், இதுவரை பெற்ற அனுபவங்கள் தந்த விவேகமும் சரி விகிதம் கலந்த வயதில் இருக்கிறார். இதுவே சரியான சமயம்.

3. இந்தியப் பொருளாதாரம் புதுப் பாய்ச்சலில் போகத் துவங்கியிருக்கும் இன்றைய சூழலில், திறன்மிக்க நிர்வாகிகளைக் கொண்ட மாநிலங்களையே உலக நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன. கனிமொழிக்கு சிறந்த நிர்வாகியாகின்ற தகுதிகள் இருக்கிறது.

4. கனிமொழியை தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக, புதுச்சிந்தனை சார் இளம் பெண்கள் பார்க்கிறார்கள். பெரியவர்களும் மதிக்கிறார்கள்.

5. கல்வியும், கவிதாச் சிந்தனையும், அடக்கமான பொருள் பொதிந்த பேச்சும், செயலும் வழக்கமான ஆரவார அரசியல்வாதிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

6. அரசியல்வாதிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்திருப்பது, அவரது பலம். சிலர் அதை பலவீனமாகக் கருதலாம். ஆனால், அரசியல் செல்வாக்கை தனது சுயஆதாயத்திற்காக பயன்படுத்தினதாகச் சொல்லும் எந்த சுட்டுவிரலும் அவரை நோக்கி இல்லை.

7. அடக்கமானவர்தான், அமைதியானவர்தான். ஆனால் பலமற்றவரல்ல என்பதை கலைஞர் கருணாநிதி கைது சம்பவத்தின்போது உலகம் உணர்ந்து கொண்டது. தனது கருத்துகளுக்காக போராடும் போர்க்குணம் கனிமொழிக்கு இருக்கிறது.

8. வானில் பறப்பதற்க்கான வாய்பிருந்தும், தரையில் காலூன்றி நிற்கும் கனிமொழியின் இயல்பு, ஊழலற்ற நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படை குணம். அது அவரால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளமிட முடியும் என்று உறுதியளிக்கிறது.

9. சில ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசம், அவருக்கு உலகின் புதிய கதவுகளை திறந்து காட்டியிருக்கிறது. ஒரு தலைவன் திறமையானவனாக, திடமானவனாக இருத்துவிட்டால் எதுவெல்லாம் சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்திருப்பதால், அது அவரது அரசியலில் எதிரொலிக்கும்.

10. ஒரு புகழ் பெற்ற தலைவரின் மகளாக இருந்தும், கனிமொழிக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. சுயம் உள்ளவர்களே வெற்றிகரமான தலைவராக விளங்கினாரகள், விளங்குகிறார்கள் என்பது சரித்திரம். வாய்ப்பிருந்தால், கனிமொழியும் ஒரு சரித்திரமாகலாம்!

7 comments:

ரவி said...

Good Points...

Anonymous said...

/***********
கனிமொழியைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது அவசியம் என்ற பேராசையின் வெளிப்படாகவும் அப்பதிவு இருந்தது.
**********/
பெரிதாக வேலை செய்த மாறனை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள். அடுத்ததாய் ஏதோ ஒரு சமூக போராளியை அரசியலுக்கு நீங்கள் இழுத்து வருவது மாதிரி ஏன் இந்த ஜோடனை. என்ன செய்யப்போகிறார்கள் என்ற பார்க்கத்தானே போகிறோம். உங்களது வலைப்புவும் இருக்கத்தானே போகிறது.

பாலு மணிமாறன் said...

மாறன் ஓரங்கட்டப்பட்டதால் தமிழகம் சந்தித்திருக்கும் பொருளாதாரம் சார்ந்த இழப்பு பற்றி எல்லோருக்கும் வருத்தங்கள் இருக்கிறது. அமைச்சர் ராசாவிற்கு நமது அச்சங்களை பொய்யாக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் என்ன செய்ய்ப் போகிறார் என்பது போகப்போகதான் தெரியும்.

//பெரிதாக வேலை செய்த மாறனை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்//

மாறன் அரசியலுக்கு வந்ததும் சமீபத்தில்தான். அவர் அரசியலுக்கு வருவதற்கும் முன் இந்த அளவுக்கு சாதிப்பார் என்று நான் சொல்லியிருந்தாலும் //ஏதோ ஒரு சமூக போராளியை அரசியலுக்கு நீங்கள் இழுத்து வருவது மாதிரி ஏன் இந்த ஜோடனை// என்று நீங்கள் கருத்துரைத்திருக்கக் கூடும் :)ஆனால் அவர் சாதித்தார் என்பது வரலாறு. அது கனிமொழி விஷயத்திலும் நிகழக்கூடும். நிகழாது என்று சொல்ல நான் கடவுள் அல்ல.

இந்த நிமிடத்திலும் கூட "சமூகப் போராளி" என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் அது மாறனை விட கனிமொழிக்கே அதிகம் பொருந்தும் என்றே தோன்றுகிறது!

சதுர் said...

திராவிட சொறிநாய்கள் வேறு எப்படி சிந்திக்கும்?

பாலு மணிமாறன் said...

:)

உங்கள் நாகரைகமிக்க கருத்துக்கு நன்றி சதுர்வேதி!

pandiidurai said...

கனிமொழி அரசியலுக்கு வருவதால் பாலு மணிமாறனுக்கு எதுவும் கிடைக்கபோவதில்லை. மேலும் மாறனே தொடர்ந்திருந்தால் என்ன நடந்து இருக்ககூடும்? மாறனின் குடும்பம் ஆசிய பணக்கார வரிசையிலிருந்து உலக பணக்கார வரிசையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடிக்க முயன்றிருக்க கூடும்.

Anonymous said...

மாறன் புதுமுகம், இருந்தாலும் அவரது வேலை என்ன என்பதை தெரிந்து ஓரளவு நிவர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.அவருடைய தொழிலையும் அபிவிருத்தி செய்து கொண்டார். ஏகப்பட்ட சட்டங்களும், வரிகளும் முறைப்படுத்தப்படாமல், இந்தியாவிற்கு வரவேண்டிய நிறுவனங்கள் வியட்நாம், சீனா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டன. நம்மவர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். கனிமொழி எம்பியாக வந்துவிட்டார், அமைச்சராக ஆக்க போகிறார் கலைஞர் என்று பேசிக்கொள்கிறார்கள். என் கேள்வி: ஏன் கலைஞர் தனது குடும்பத்துக்குள்ளேயே கடலை உடைக்கிறார். அவர் குடும்பத்தை தவிர மற்றவர்கள் எல்லாம் சோடையா?

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com