இந்தத் தொடரில் என்னையும் மாட்டி விட்ட devற்கு கோடானகோடி நமஸ்காரங்களுடன் நான் சொல்வதெல்லாம் கீழே இருக்கிறது ..........
Four jobs I have had:
1. சின்ன வயதில், கூளையனூர் ஊர்த் திருவிழா சமயம் தோட்டதில் இருந்து வாழைத் தாரை வெட்டி வந்து கடமையே கண்ணாக வாழைப்பழம் விற்றது.
2. டிப்ளோமா முடித்து பொலிகாளை மாதிரி ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு காலையில், கம்பம் மாமாவின் ரி·பிரிஜிரேஷன் கடையில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தபோது, "உன்னால் சொந்தத் தொழில் செய்ய முடியாது" என்று அவர் சவால் விட, அன்று இரவே மதுரையில் இருந்து வாங்கி வந்த stationaries கொண்டு, அவர் தந்த இடத்தில் கடை போட்டு லாபம் பார்த்தது.
3. சுயமாக வேலை தேடி சென்னை வந்தபோது carewell homes என்ற கம்பெனியில், என்னென்னவோ வேலையெல்லாம் பார்த்தது.(கேபிள் டிவி புதிதாக வந்த காலம் அது. kadar Nawaz Khan ரோட்டிலிருந்த ஒரு பங்களா வீட்டில் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப் போனபோது, அங்கிருந்த சேச்சி, கனெக்ஷன் கொடுக்கணும் என்று ரொம்ப உள்ளே கூட்டிக் கொண்டு போக அரண்டு போய் ஓடி வந்து, சீக்கிரமே வேலையை விட்டு விட்டேன்)
4. 1992 முதல் இன்று வரை வட இந்தியா முதல், மலேசியா வரை பல இடங்களில் எலக்டிரிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் வாழ்க்கை நடத்துவது!
Four movies I would watch over and over again:
1. சதி லீலாவதி (அட..நம்ம பாலு மகேந்திரா எடுத்ததுங்க!)
2. முதல் மரியாதை
3. தர்மத்தில் தலைவன்
4. தில்லானா மோகனாம்பாள்
(இங்கிலீஷ் படமெல்லாம் நமக்கு அம்புட்டு புரியாதுங்கோ...)
Four places I have lived (for years):
1. எண்ணூர் ( கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகில் )
2. ராயப்பன்பட்டி ( St.Aloysious Hr.Sec.School Hostel )
3. பொள்ளாச்சி ( Nachimuthu Polytecnic - இறந்துபோன லட்சுமனன் காதலித்த அஜிதா நீ எங்க இருக்க?)
4. வாரணாசிக்கு பக்கத்தில் அன்பாரா, மலேசியாவின் காப்பார் மற்றும் 10 வருடத்திற்கு மேலாக சிங்கப்பூர்.
Four TV shows I love to watch:
1. ஹார்ஷா போக்ளே வர்ற show எல்லாம்
2. மெட்டி ஒலி ( முதல் நாள் பார்த்துமே சொன்னேன் - இது நிச்சயம் வெற்றி பெறும்னு! )
3. அது மட்டும் ரகசியம் ( சமீப காலத்தில் ஜவ்வடித்த போதும்.. ரசிக்கிறேன்!)
4. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரலில் தில், தில், மனதில் (படைப்பவர் - சிங்கப்பூர் "ரவி பெர்னாட்" கலைச்செல்வன்)
Four places I have been on vacation:
1. சின்ன வயசில இருந்து அடிக்கடி - சுருளித்தீர்த்தம்
2. மலேசியாவின் பிரேசர் ஹில்
3. அதே மலேசியாவின் பங்கோர் தீவு
4. இந்தோனேசியாவின் பாதாம் தீவு
Four of my favourite foods:
1. அதாங்க .. சிக்கன் பிரியாணி
2. இரவென்றால் - சப்பாத்தி
3. முன்னாடியெல்லாம் இடியாப்பம்... இப்போ புட்டு
4. தக்காளி சாதம்
Four sites I visit daily:
1. www.cricinfo.com
2. http://us.rediff.com
3. www.its.uci.edu/~jaykay/leander.html
4. www.thamizmanam.com
நான் tag செய்ய நினக்கும் 4 பேரை ஏற்கனவே மற்றவர்கள் tag செய்திருக்கக் கூடும் என்பதால், tag செய்வதை தவிர்த்து விடை பெறுவது உங்கள் , உங்கள் , உங்கள் ..........................
Tuesday, February 28, 2006
Monday, February 27, 2006
விசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதை

சிங்கப்பூர் வரவிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரது புத்தகங்களை சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். "நியூட்டனின் மூன்றாவது விதி" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் - நா.முத்துக்குமாரின் முந்தைய தொகுப்பான " பட்டாம் பூச்சி விற்பவனில்" தன்னை பாதித்த வரிகள் என்று கந்தர்வன் கீழ்வரும் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்....
"பொண்டாட்டி தாலியை
அடகு வச்சு
புஸ்தகம் போட்டேன்
தாயோளி
விசிட்டிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு "
பட்டென்று நிறுத்தி முகத்தில் அறைந்த வரிகள்.
இதை படித்துவிட்டு வலி தாங்காமல் கந்தர்வன் ஐம்பது ரூபாய் அனுப்பி வைத்தாராம். நானோ "பட்டாம் பூச்சி விற்பவனை" நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கக்கூடாது என்றும், எங்காவது காசு கொடுத்து வாங்கிப்படிக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.
சிங்கப்பூர் வானொலி 96.8ன் நேர்காணல் முடித்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ராத்திரியின் 11 மணியில் அந்தக் கவிதை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டேன். மெலிதாக சிரித்தபடி பாலச்சந்தர் அதைப் படித்துவிட்டு 500 ரூபாய் அனுப்பி வைத்த கதையைச் சொன்னார்.
புகழ் பெற்ற அவரது "தூர்" கவிதையை அவரது குரலில் கேட்க வாய்த்தது. ஒரு ஆழ் கிணற்றிலிருந்து மேல் எழும்பி வருவது மாதிரியான குரலில் அந்தக் கவிதை சோடியம் விளக்குகளின் ஓட்டதின் மத்தியில் நெஞ்சில் சோகம் அப்பிச் சென்றது.
மறுநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த பெரிய கூட்டத்தில் தரமான தமிழ் மற்றும் உலகக் கவிதைகளை அடையாளம் காட்டி அற்புதமாகப் பேசினார் கவிஞர் நா.முத்துக்குமார்.
கூட்ட முடிவில், நண்பர் பனசை நடராஜன் அருகில் வந்து என் காதில் கிசுகிசுத்தார் ...
" நா.முத்துக்குமார் கொண்டு வந்த புஸ்தகமெல்லாம் விற்றுப் போச்சாம். இன்னும் ஏதாவது புஸ்தகம் இருக்கா?"
ஒப்பிடல் மனசு

தூசற்ற விரைவுச்சாலைகளை
விழிநோக்கும் வேளையில் ஏன்
உன் அழகிய கால்களின்
வழுகிய தடங்கள்
அலையுது நெஞ்சில்?
ஒடித்த சோளத்தை
உன் உள்ளங்கைகளில்
நசிய நசுக்கியதும்...
பச்சைப்பால் மணம்போவதற்குள்
புசிக்குமாறு சிணுங்கியதும்...
எழுவதேனோ நினைவுகளில்?
கே.எ·சி கோழியை
குத்தியோ பிளந்தோ
தீவிரமாக தின்று தீர்க்கையில்
எதற்கு இந்த ஞாபகங்கள்?
Friday, February 24, 2006
கதவின் சில ஜன்னல்கள்

சில நிமிடங்களுக்கு ஒருமுறை
வந்துபோகும்
ரெயிலென
வந்துபோகும் உன் நினைவுகள்....
ஒவ்வொரு முறையும்
நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.
உட்கார்ந்தோ, நின்றோ...
கர்ப்பிணிப் பெண் அல்லது
முதியோருக்கு இடம் தந்தோ...
சமமாக சாலைகளில் ஓடி
ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் வாகனங்களை
பார்வையால் பிசைந்தபடியோ...
அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.
இன்னும் சிறிது நேரத்தில்
ஏதேனும் ஆங்கிலக் குரலில்
வந்துவிடலாம்
நானிறங்கும் 'அடுத்த நிறுத்தம்'.
இம்முறை
வழக்கம் போல்
நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி
நானும் இறங்கிக் கொள்வேன்...
போகும் ரெயிலின்
மூடிய கதவுகளுக்குப்பின்
போகும் நம்மை பார்த்தபடி
நடந்து போகலாம் நாம்!
Thursday, February 23, 2006
நனைவு நினைவுகள்
ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.
எத்தனையோ
மழை ஞாபகங்கள்...
வெயில் ஞாபகங்கள்
வெகு சிலவே.
இன்று மழை நாள்.
நீர் விரல்கள்
ஞாபகம் கிளறியது.
புத்தகப்பை தோள்வலிக்க
நீர் தொட்டுப் பார்த்திருந்த
பள்ளிகால மழை...
குடைகீழ் நான் நடக்க
ஓரளவு நனைந்தபடி
வார்த்தைகளோடு
உடன் நடந்த தந்தை...
எதிரெதிர் நிறுத்தங்களில்
நானும் அவளும்.
மழையிடம் மட்டும்
காதலைச் சொல்லியபடி
நான்...
அடந்த ரத்தம் மெலிந்து பரவ
தெருவோர மழையில்
பிணமாய்ப் போன
யார் பெற்ற மகனோ...
ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.
குடை மறந்த என்னை
ஜன்னல் -
மழை பார் என்றது.
நனைவதென முடிவு.
அப்புறம் எதற்குக் குடை?
இந்த மழையில்
நடைபாதைப் புற்களே
முளைக்காத போது
முளைக்கவா முடியும் நான்?
நனைவதே நல்லது...
முளைக்கலாம்
சில நினைவுகள்!
வெயிலை வென்று விடுகிறது
மழை.
எத்தனையோ
மழை ஞாபகங்கள்...
வெயில் ஞாபகங்கள்
வெகு சிலவே.
இன்று மழை நாள்.
நீர் விரல்கள்
ஞாபகம் கிளறியது.
புத்தகப்பை தோள்வலிக்க
நீர் தொட்டுப் பார்த்திருந்த
பள்ளிகால மழை...
குடைகீழ் நான் நடக்க
ஓரளவு நனைந்தபடி
வார்த்தைகளோடு
உடன் நடந்த தந்தை...
எதிரெதிர் நிறுத்தங்களில்
நானும் அவளும்.
மழையிடம் மட்டும்
காதலைச் சொல்லியபடி
நான்...
அடந்த ரத்தம் மெலிந்து பரவ
தெருவோர மழையில்
பிணமாய்ப் போன
யார் பெற்ற மகனோ...
ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.
குடை மறந்த என்னை
ஜன்னல் -
மழை பார் என்றது.
நனைவதென முடிவு.
அப்புறம் எதற்குக் குடை?
இந்த மழையில்
நடைபாதைப் புற்களே
முளைக்காத போது
முளைக்கவா முடியும் நான்?
நனைவதே நல்லது...
முளைக்கலாம்
சில நினைவுகள்!
Sunday, February 19, 2006
வேறானவனின் நாளை
Friday, February 17, 2006
பிரிவோம் சந்திப்போம்

நாம்
ஒரு முறை சந்தித்தோம்
முற்றிலும் மூழ்கி விடுவோமோ...
அஞ்சும் அளவு அன்பின் சக்தி
ஆக்கிரமித்தது
உணர்வுகள்
கொப்பளித்து கொப்பளித்து
குளிர்ந்தது
பெருத்த மேகங்களுக்கு
பின்னிருந்து விரல் நீட்டின
நம்பிக்கை ரேகைகள்
சீக்கிரமே
காலத்தின் விரல்களால்
சிதைந்தோம்
திசைகள் மாறிப் பிரிந்தோம்
மேகங்கள் இருண்ட நாளில்
சந்தித்தல் சாத்தியமற்ற
சூழலில்
மீண்டும் ஒருமுறை
முன்னிறுத்தப்பட்டோம்
வாழ்க்கை
அதிசயங்கள் நிகழும் நாட்களும்
அடங்கியதாகவே
இருக்கிறது
தொட்டதும் சுருங்குவது
தொட்டாச்சிணுங்கி மட்டுமா
நீயும் நானும் கூடத்தான்
இதோ
இன்னொருமுறை
பிரிவதற்குத் தயாராக நாம்
இந்தப்பிரிவு
நிரந்தரமற்றதென
சொல்லிக் கொள்கிறோம்
நம் பாதைகள்
இன்னொருமுறை
சந்திக்கலாம்என்றும் கூட
உறுதியானதல்ல
என்றாலும் அது
நடக்கும் என்றே தோன்றுகிறது
காரணம்
கடந்த காலத்தின்
வெற்றிடத்தை
அது மட்டும்தானே
அடைத்துச் செல்ல முடியும்?
நன்றி : "திண்ணை"
எனது இந்தக் கவிதையை பதிப்பித்ததற்காக !
Wednesday, February 15, 2006
காதலர்தினம் இல்லாத நூற்றாண்டில் நிகழும் கதை

வருடம் 2106.
சிங்கப்பூரை ஒட்டிய கடற்புரம்.
அந்தக் கட்டிடம் கடல் நடுவே நாங்கூரமிடப்பட்டிருந்த ராட்சச பலூன் மீது கட்டப்பட்டிருந்தது.அதன் 160வது தளத்தில் 100 பேர் கூடியிருந்ததார்கள்.
அது - " போன நூற்றாண்டுத் தமிழர்கள் " என்ற கருத்தரங்கு.
வயிற்றைத்தொடும் தாடியோடு ஒரு கண்ணாடி போட்ட அறிஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.அவரைச்சுற்றி மட்டும் விளக்குகள் பீய்ச்சிய ஒளி. மற்றவர்கள் இருட்டில்!
" உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் போன நூற்றாண்டு மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒரு சங்கதி அவர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் பெரும் பகுதியை சாப்பிட்டிருக்கிறது. "
அடி தன் முன்னால் இருந்த பட்டனைத் தட்ட விளக்குகள் அவன் மீது ஒளிவீச, முன்னால் இருந்த பெரிய திரையில் அகலமாய் அவன் முகம்.
" என்ன சந்தேகம் மகனே? " என்றார் அறிஞர்.
எல்லோரும் திரையில் தோன்றிய அடியை ஆர்வமாய் பார்த்தார்கள்.
" இலக்கியம் என்றால் என்னவென்று சுருக்கமாக விளக்க முடியுமா ? "
" முடியும் " என்ற அறிஞர் தொடர்ந்து பேசினார்.
" இலக்கியம் என்பது ஒரு போதைப்பொருள் மாதிரி. எப்படி போதைப் பொருள் மனிதமனதைப் பாதித்து உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை பிம்பங்களை மனதுக்குள் விதைக்கிறதோ, அதே காரியத்தை இலக்கியமும் செய்தது. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல் யாராவது ஒருவர் கற்பனை செய்து எழுத, பலரும் அதை படித்துவிட்டு அதில் மனம் ஒன்றிப்போய் கற்பனையான உலகில் வாழ்ந்தார்கள்."
" ஆக இலக்கியம் என்ற விஷயத்தால் எந்த பலனும் இல்லை என்று சொல்கிறீர்கள்? "
" பலனா? இலக்கியம் என்பது போன நூற்றாண்டு மனிதர்களை பிடித்திருந்த நோய் என்றுதான் சொல்ல வேண்டும்."
" அவ்வளவு ஆபத்தான ஒன்றை நம் முன்னோர்கள் ஏன் நேசித்திருக்க வேண்டும் ? " இந்தக் கேள்வியை மகி கேட்டான்.
இப்போது வெளிச்சம் அவனிடம், திரையில் அவன் முகம்!
" அவர்கள் நம்மைப்போல் இல்லை. சரியான சோம்பேரிகள். நாம் தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறோம். அவர்களோ நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் தூங்கினார்கள். இலக்கியம் அந்த சோம்பேரித்தனத்தை அங்கீகரித்ததால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. "
" சோம்பேறிகள் சிலர் இலக்கியம் என்று ஒன்றைப் படைத்து இன்னும் பலரை சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தானே ? "
" புத்திசாலி. சீக்கிரம் புரிந்து கொண்டாய். " என்று பாராட்டினார் அறிஞர்.
எல்லோரும் மெலிதாக கைதட்டினார்கள்.
" இப்படிப்பட்ட ஆபத்தான விஷயத்தை அரசாங்கங்கள் எப்படி விட்டு வைத்தன? "
" எது அதிக ஆபத்தானது என்ற கேள்வி எழும்போது அதிக ஆபத்தான விஷயத்தின்மீது தாக்குதல் தொடுப்பதையே அரசாங்கங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. போன நூற்றாண்டில் இதைவிட ஆபத்தான பல விஷயங்கள் இருந்ததால் இதை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். "
" இதைவிட ஆபத்தான விஷயங்களா? ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா? " என்று கேட்டாள் சகி.
" பலவற்றைச் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, சினிமா இப்படிப் பல அதி ஆபத்தான விஷயங்கள். அதிலும் சினிமா மிக ஆபத்தான, அபத்தமான விஷயமாக கருதப்பட்டது.....சரி, நானே பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவைப் பற்றி உங்களில் யாராவது விளக்க முடியுமா? "
" முடியும்! " என்ற கவி மீது விளக்குகள் விழுந்தன.
" சொல் பெண்ணே... சினிமா என்பது என்ன? "
" அது இலக்கியத்தை விட அதிகமாக மக்களை ஆக்கிரமித்திருந்த போதைப் பொருள். சினிமா என்ற சமாச்சாரம் பல வடிவங்களில் மக்களுக்குத் தரப்பட்டது. அதிலும் தமிழ்ச் சினிமா இருக்கிறதே அது இன்னும் அதிக அபத்தம்.
தலை மயிர் கலையாமல் 50 பேரை அடிக்கும் கதாநாயகன், அவன் பம்பரம் என்ற பொருளை தொப்புளில் விட மல்லாந்து படுத்திருக்கும் கதாநாயகி...சினிமாவில் வரும் பாடல்களை வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வந்தார்கள். அந்த பாடல்களில் இலக்கிய நயம் இருக்கிறதா இல்லையா என்று வேறு விவாதித்து நேரத்தை வீணாக்கினார்கள். இதுதான் சினிமா மற்றும் அதன் சார்ந்த சுருக்கமான விவரம் "
" நல்லது பெண்ணே... உனது விளக்கம் ஏறக்குறைய சரியாகவே இருக்கிறது " என்று ஒப்புதல் தந்த அறிஞர் தொடர்ந்து பேசினார்.
" தமிழ்ச் சினிமா மட்டுமல்ல. தமிழ் இலக்கியம்கூட அபத்தம் நிறைந்ததாகவே இருந்தது. படைப்பாளிகளைவிட வெட்டி விமர்சகர்கள் அதிகம் இருந்தார்கள். தாங்களும் ஒன்றும் செய்யாமல், மற்றவர்களையும் ஒன்றும் செய்யவிடாமல் தடுத்து வந்த இவர்கள் மிக மிகச் சோம்பேறிகள் "
" இலக்கியத்தில் என்னவெல்லாம் இருந்தது ஐயா? "
" கதை, கவிதை, கட்டுரை என பல வடிவங்கள் இருந்தது. கதையை பலரும் விரும்பிப் படித்தாலும், கவிதையே மனிதர்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்திய வடிவம். "
" உதாரணமாக ஒன்றைச் சொல்லுங்கள் "
" சொல்கிறேன்.
அதற்குமுன் சிறுவிளக்கம். இன்று ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அரசாங்கத்திடம் தகவல் சொல்லிவிட்டு இணைந்து வாழலாம். ஆனால் 2005ல் காதல், கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அதிகம்.
அதிலும் காதல்... ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சம்பிராதாயத்தில் இணைவதற்கு முன் நிகழ்கிற விஷயங்களை காதல் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படி காதலிக்கும் காலங்களில் ஆண் பெண்ணுக்காக ஏங்குவதும், பெண் ஆணுக்காக ஏங்குவதுமான பெருமூச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இதில் யாராவது ஒருவர் காதலுக்கு மறுப்புச் சொல்லி விட்டால், அது தோல்வியடைவதும் உண்டு. அப்படி காதல் தோல்வி அடைந்த ஒருவன் தன் காதல் தோல்வி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சொல்கிறேன் கேளுங்கள்....
காற்று வராத என்று
ஜன்னலைத்
திறந்து வைத்தேன்.
காற்று வந்தது....
ஜன்னலைச்
சாத்திச் சென்றது! "
அறிஞர் இந்தக் கவிதையைச் சொல்லி நிறுத்தியதும் அங்கு சட்டென்று ஒரு மொளனம் சூழ்ந்தது.
அந்தக் கவிதை எல்லோருக்கும் புரிந்தது.
அவர்கள் மனதில் புகுந்தது.
பிசைந்தது.
' ஓ...இலக்கியம் இவ்வளவு சுவையானதா' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது.
அதற்கப்புறம் அறிஞர் பல விஷயங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்தவர்களின் மனமோ அந்தக் கவிதையிலேயே லயித்துக் கிடந்தது.
" உலக சரித்திரத்தையே மாற்றும் சக்தி இலக்கியத்திற்கு இருந்ததால்தான், ஆபத்து மிகுந்த இந்த போதைப்பொருளை உலக அரசாங்கங்கள் தடை செய்தன. " என்று சொன்னார் அறிஞர்.
அடி அன்றைய தின இரவு சகியை நினைத்து ரகசியமாய் ஒரு கவிதை எழுதினான். அது இப்படித் துவங்கியது....
" அன்பு சகி.
என் உயிர் கலந்த
ஆக்ஸிஜனே... "
மத்தியப் பார்வைகள்
மதிய நேரத்தில்
புளோக் தாண்டி
எட்டு வைப்பவர்களை
விட்டு வைக்குமா வெப்பம்?
தாய்லாந்து தொப்பிக்காரனின்
இயல்புக்கை எந்திரக்கையாகி
ஓசையிட்டாலும்
அண்ணாந்து பார்த்திருக்கும்
சிரச்சேதப் புற்களிடம்
காந்திய மெளனம்.
வியர்த்த
வியட்னாமிய இளைஞனுக்கு
எஸ்பிஎஸ் பஸ்ஸின்
இதமான குளிரிலிருந்து
பரிவுப்பார்வை நீட்டல்
சாத்தியமாகிறது.
புளோக் தாழ்வாரத்தில்
முழங்கால் நீவும்
சீனக்கிழவியின் பார்வையில்
இன்னும் சாதிக்க
ஏதோ ஒரு இலக்கு!
தூரத்து உணவகத்தில்
பீர்போத்தல் தனிமையில்
அருகில் கார் கழுவும்
இந்தோனேசியப் பணிப்பெண்ணின்
வெளுத்த கால்களைப்
பார்வையில் கழுபவன்
கிழவனா?
தெரியவில்லை.
மதிய நேரத்தில்
புளோக் தாண்டி
எட்டு வைத்தவர்களை
சுட்டு வைத்தது வெப்பம்!
புளோக் தாண்டி
எட்டு வைப்பவர்களை
விட்டு வைக்குமா வெப்பம்?
தாய்லாந்து தொப்பிக்காரனின்
இயல்புக்கை எந்திரக்கையாகி
ஓசையிட்டாலும்
அண்ணாந்து பார்த்திருக்கும்
சிரச்சேதப் புற்களிடம்
காந்திய மெளனம்.
வியர்த்த
வியட்னாமிய இளைஞனுக்கு
எஸ்பிஎஸ் பஸ்ஸின்
இதமான குளிரிலிருந்து
பரிவுப்பார்வை நீட்டல்
சாத்தியமாகிறது.
புளோக் தாழ்வாரத்தில்
முழங்கால் நீவும்
சீனக்கிழவியின் பார்வையில்
இன்னும் சாதிக்க
ஏதோ ஒரு இலக்கு!
தூரத்து உணவகத்தில்
பீர்போத்தல் தனிமையில்
அருகில் கார் கழுவும்
இந்தோனேசியப் பணிப்பெண்ணின்
வெளுத்த கால்களைப்
பார்வையில் கழுபவன்
கிழவனா?
தெரியவில்லை.
மதிய நேரத்தில்
புளோக் தாண்டி
எட்டு வைத்தவர்களை
சுட்டு வைத்தது வெப்பம்!
Saturday, February 11, 2006
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்குமார்

"பட்டாம்பூச்சி விற்பவன்" என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலக இதயங்களை வாங்கியவர் கவிஞர் நா.முத்துக்குமார்.
வாழ்க்கையை மனசுக்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்தி, நேசிக்கச் செய்யும் படைப்புகளைத் தரும் நேர்த்தி தெரிந்தவராக நாம் இவரை அடையாளம் கண்கிறோம்.
கவியரசு வைரமுத்துவிற்கு அப்புறம் வந்த திரைப்படப் பாடலாசிரியர்களில், எழுதுகிற பாடலெல்லாம் கவிதையாக இருக்க வேண்டுமென்ற கவனம் இவரிடம் அதிகம் இருப்பதைப் பார்க்கலாம்.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் வானொலியான ஒலி 96.8, 2004,2005ம் ஆண்டுகளின் சிறந்த பாடல்களாக இவரது பாடல்களை தேர்ந்தெடுத்திருப்பது ( மக்கள் வாக்களிப்பின் மூலம் ) அதற்கு அத்தாட்சி.
இம்மாத இறுதியில் சிங்கப்பூர் வருகிறார் நா.முத்துக்குமார். இவரது கவிதை முக அறிமுகத்திற்கு & முதல் அறிமுகத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறது சிங்கப்பூர்!
Subscribe to:
Posts (Atom)
