இணைய தளத்தின் பக்கங்களில்
பார்வை ஊர்வலம்...
மதிய உணவுக்குப்பின்
எம் எம் எஸ் அனுப்பி அவளோடு
பகிர்ந்து கொண்டேன் காதல்.
தரைவழி ஜோகூர் வான்வழி கூச்சிங்
பயண சீட்டுக்காய் சிங்போஸ்ட்* வாசலில்
செலவு சிலநிமிடம்.
மார்ச் மாதம் முதல் படுக்கையில் படுத்தபடி
டெலிவிஷன் திரைவழி
பங்கு பரிவர்த்தனைஉத்தேசம்.
ஒருநாள் கடந்து அலுவலகம் முடிந்து
வீதி நடக்கையில் மனசு கேட்டது....
இன்றாவது -
டோடோவில்**
முதல்பரிசு எனக்கென நல்ல சீட்டெடுக்குமா
சிராங்கூன் கூண்டுகிளி ?
*சிங் போஸ்ட் - சிங்கப்பூர் தபால் நிலையம்
** டோ டோ - சிங்கப்பூர் லாட்டரி
3 comments:
சிங்கப்பூர் சூழலை ஒத்து வரும் உங்களின் கவிதைகள் அருமை. நிறைய எழுதுக.
அப்புறம் சிரங்கூன் கூண்டுக் கிளியின் தலையெழுத்தை நாம் தான் சொல்ல வேண்டும் போல... பார்க்க பரிதாபமாக(அதன் சொந்தகாரனையும் சேர்த்து) இருக்கும்
onnume puriyale
:)))
Post a Comment