Saturday, April 30, 2005

சாமிகிட்ட கேட்ட வரம்

சாமிகிட்ட கேட்பதற்கு எத்தனையோ வரங்கள் நினைப்பில். எல்லா வரமும் தருமா சாமி? தெரியவில்லை. குறைந்தபட்சம் இதைத் தந்தாலாவது தேவலை...!!!

Image hosted by Photobucket.com


சாமி...

வேலை அவசரத்தில்
சிகப்பு சிக்னல் பரிதவிப்பில்
பச்சை விளக்குக்கு
பதற்றமாய் பார்த்திருக்க....
வயிற்றுப் பிழைப்புக்கு
முகம் முன்னே கரம் நீட்டும்
குருட்டு மனிதனின் இருட்டுக்குள்
கரையாமல் மறையாமல்
ஏதேனும் ஈகின்ற
இளகிய மனம் எனக்குத்தா!

9 comments:

குழலி / Kuzhali said...

அருமையான கவிதை... அது சரி ஏன் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லை, கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் முக்கியதுவம் கவிதைகளுக்கு தரப்படவில்லை என எண்ணுகிறேன்

பாலு மணிமாறன் said...

unngal commentuku nandri-- kuzhali

Vijayakumar said...

//அது சரி ஏன் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லை, கட்டுரைகளுக்கு அளிக்கப்படும் முக்கியதுவம் கவிதைகளுக்கு தரப்படவில்லை என எண்ணுகிறேன் //

குழலி, தப்பு தப்பு. எல்லா கட்டுரைகளுக்கும் முக்கியதுவமும் தரப்படுவதில்லையே. சூடான நிகழ்கால அரசியல்,சமூக, சினிமா மேட்டர் உள்ள கட்டுரைகளுக்கு மட்டுமே அந்த ஆதரவு. :-) அப்பப்போ யாரவது நல்ல கட்டுரைய கண்டுக்குவாங்க அவ்வளவு தான். கவிதைன்னா சொல்லவே வேண்டாம். கவிதையில கொஞ்சம் விலைமகள் பெண்களை பத்தி இருந்தா நல்ல கவிதைன்னு சொல்லுவாங்க. அவ்வளவு தான். மத்த கவிதைகளை ஒன்னு இல்ல இரண்டு பேர் தான் கண்டுக்குவாங்க.

பாலு, எனக்கு பிடிச்சிருக்கு கவிதை.

பாலு மணிமாறன் said...

பொதுவாகவே கவிதைகளை " அட! " என்று லேசாக வியப்பதோடு நின்று விடுகிறது மனது.கட்டுரைகளோடோ உடன்படவோ, மறுக்கவோ செய்கிறது...உடன்படும்போதும், மறுக்கும்போதும், பின்னூட்டங்கள் வருவது இயல்புதானே?

:)))

மானஸாஜென் said...

நல்ல கவிதை பாலு வாழ்த்துகள்- நிறைய எழுதுங்கள்.

மானஸாஜென்

வீ. எம் said...

நல்ல கவிதை பாலு வாழ்த்துகள்

SnackDragon said...

//குருட்டு மனிதனின் இருட்டுக்குள்
கரையாமல் மறையாமல் //
nalla vari

Ramya Nageswaran said...

மனதைத் தொடும் கவிதை பாலு. கவிதைக்கேற்ற படங்கள் மேலும் மெருகூட்டுகிறது.

டைரியைப் பற்றிய கவிதையும் (முக்கியமாக அறிமுக வரிகள்) அருமையாக இருக்கிறது.

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரம்யா

அன்பு said...

அருமையான கவிதை பாலு.
கவிதைக்கும் மேலாக உங்கள் மனிதநேயம் - குறைந்தபட்சம் செய்யவேண்டும் என்ற உணர்வு பாராட்டத்தக்கது.

அப்புறம் நல்லாருக்கீங்களா பாலு!? இப்பல்லாம் உங்களைப்பற்றி விஷயங்களை தமிழ்முரசில் படித்து தெரிந்துகொள்கிறேன்:).
கடந்தமாத கவிமாலை மிகச்சிறப்பாக, புதுமையாக படைக்கப்பட்டதாக முரசில் படித்தேன், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.