Monday, March 28, 2005

ஒரு பணிப்பெண்ணின் சமையலறை மெட்டுகள்


Image hosted by Photobucket.com



ஒரு சல்லடை பிரயோகத்தின் பின்னும்
விரல் தாண்டி உதிரியாக
இசைக்குதிரையின் அங்கத்திலிருந்து
சிதறிய கீதச்செதில்கள்.
அவகாசம் கடந்த மெட்டின் படம்
சமையலறைச் சுவரில் தொங்குகிறது.

அடுப்புச்செயலெரித்த மெளனஎந்திரம்
பழைய இசைத்தொட்டியில்
விரல் அலைக்கிறது.

வரிகள் மழுங்கிய பாடல்களோடு
அவனும் அவளும் காற்றாகி
மலை முகடுகளில், கரட்டுப்புழுதியில்
தேனுண்ணும்
வண்ணத்துப்பூச்சிகளின் பூவில்
நாக்கு நீட்டி தேனும் உண்கிறார்கள்.

பயனீட்டாளனின் கதவழைப்புக்கு
திறந்து சிந்த
சேமிப்பில் இன்னொரு செயற்கைப்பூ!

3 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

ungkaL urainadaiyaivida ungkaL kavithai enakkup pidikkiRathu ,.. soRpirayookamum, kaRpanaiyum, uvamaiyum arumaiyaay varukiRathu ungkaLukku,..
'worker' paththiyum oru kavithai ezuthungka,.
vAzththukkaL.

பாலு மணிமாறன் said...

Thankyou for your comments J ! i will write about it soon !

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள மணிமாறன்,

நீங்கள் எழுதக்கூடிய நடப்புவிவகாரத் தலைப்புகள்

1) வெளிநாட்டு ஊழியர்
2) துப்புரவுத் தொழிலாளி
3) சிரெங்கூன் சாலை
4) காஸினோ என்றழைக்கப்படும் சூதட்டக்கூடம்
5) காக்காய் சுடுதல்
6) மறுபயனீடு
7) நீர் சேமித்தல்
8) களக் க்யுடியேறிகள்
9) பதின்ம வயது கர்பம்/சிசுக் கொலை
10) இலவசம்/ இலவச இணைப்பு/ நான்கிலக்கம்

இன்னும் நிறைய எழுதலாம்,..
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்க, வளஎர்க,. அன்புடன், ஜெ