Wednesday, April 27, 2005

ஓவியங்களில் தொங்கிய சுவர்

மெளனம் ஓவென்று கூச்சலிடும் தருணங்களில் - கூச்சல்கூட கண்களுக்கு மெளனமாய்த் தெரிகிறது.ஒரு மெளனமிட்ட கூச்சல் வடிகிறது இப்படி.....

Image hosted by Photobucket.com

வார்த்தைக்கும் வரிகளுக்கும்
அர்த்தங்கள் வெகுசிலவே.
மௌனம் -
ஆயிரம் வகையில் அர்த்தப்படும்.

அதிகம் பேசுபவனிலும்
ஆழ்ந்து மெளனிப்பவனிடமே
அச்சம் வருகிறது.

மெளனமாய் இருப்பதால்தான்
மோனாலிசா ஓவியம் மதிக்கப்படுகிறது.
மெளனம் -
ஓவியங்களின் பொதுமொழி.

நாய்கூட
பிடிக்காதவர்களை மட்டுமே குரைக்கிறது.
பிடித்தவர்களோடு பேசும் அது
நக்கியபடி மெளனமொழி!

நம் ஊர் சாமிகளும் பேசியதேயில்லை.
சாமியாடிப் பேசும் நம்மைப்பார்த்து
மெளனமாய்...
புன்னகை மட்டுமே செய்கின்றன.

பதின்மவயதில் பார்த்த ஒரு பெண்
இறுதிவரைக்கும் மெளனித்தே போனதனால்
இன்றுவரை அவளுக்கு
ஆயிரம் குரல் பொருத்தி
அழகு பார்த்திருக்கிறேன்....

பலநூறு முறை பேசியதுண்டு அப்பா...
கடைசி நாற்காலியில்
மெளனித்த அவர் மட்டும்
இன்னும் நெஞ்சில் புகைப்படமாய்!

ஊர்விழிக்கா காலையில் விழித்த மனம்
வாழ்க்கை வருடுகையில்
சத்தமில்லா மெளனமே சந்தோஷம்.

இப்போதும்.....
என் ஜன்னலுக்கு வெளியே
விரிந்து கிடக்கிறது இரைச்சல்.
மனசுக்குள்
நிறைந்து கிடக்குது மெளனம்!

9 comments:

அன்பு said...

பலவார்த்தைகள் சொல்ல இயலாததை மைளனம் சொல்லும் - வார்த்தைகள் வர இயலாத வேளைகளில். பலருக்கு மைளனம் கைவருவதில்லை...

இதெல்லாம் என்னவா...? அதான் சொன்னேனே :)- பலருக்கு மைளனம் கைவருவதில்லை...

பாலு மணிமாறன் said...

அன்று....நேற்று சன் டி.வியில் பேட்டியளித்த வசனகர்த்தா ராஜா சந்திரசேகர் " சில இடங்களில் கண்ணீர் வசனமாகும்: மெளனம் பதில்களாகும்" என்றார். கவிதைகூட பேசாதபோதுதான் வலியதாய்த் தெரிகிறது ! :))))

Vijayakumar said...

மௌனம் (கவிதையாக) பேசியதே!

மொளனம் - என்றிருப்பதை மாற்றி விடுங்கள். mau என்று அடிங்கள் அது 'மௌ' ஆகிவிடும். கஷ்டப்படவேண்டாம்

பாலு மணிமாறன் said...

:))) @ Alwa

இப்னு ஹம்துன் said...

ஒரு கவிதையின் அழகு எதில்?
வார்த்தைக்கப்பாலும் அது அர்த்தங்களுக்கு வழி காட்டும் போது!
அவ்வகையில் நல்ல கவிதை இதுவும்.

பாலு மணிமாறன் said...

Thank You Ifnu !!!

இளங்கோ-டிசே said...

//பதின்மவயதில் பார்த்த ஒரு பெண்
இறுதிவரைக்கும் மெளனித்தே போனதனால்
இன்றுவரை அவளுக்கு
ஆயிரம் குரல் பொருத்தி
அழகு பார்த்திருக்கிறேன்....//
:-)))

பாலு மணிமாறன் said...

இது பெரும்பாலும் எல்லோருக்கும் நிகழ்ந்து விடுகிற ஒரு அனுபவம்தான்...சரிங்களா டி.சே? :))))

Unknown said...

//அதிகம் பேசுபவனிலும்
ஆழ்ந்து மெளனிப்பவனிடமே
அச்சம் வருகிறது.//

Very very true