Tuesday, February 28, 2006

சங்கிலிப்பதிவில் நான்

இந்தத் தொடரில் என்னையும் மாட்டி விட்ட devற்கு கோடானகோடி நமஸ்காரங்களுடன் நான் சொல்வதெல்லாம் கீழே இருக்கிறது ..........

Four jobs I have had:

1. சின்ன வயதில், கூளையனூர் ஊர்த் திருவிழா சமயம் தோட்டதில் இருந்து வாழைத் தாரை வெட்டி வந்து கடமையே கண்ணாக வாழைப்பழம் விற்றது.

2. டிப்ளோமா முடித்து பொலிகாளை மாதிரி ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு காலையில், கம்பம் மாமாவின் ரி·பிரிஜிரேஷன் கடையில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தபோது, "உன்னால் சொந்தத் தொழில் செய்ய முடியாது" என்று அவர் சவால் விட, அன்று இரவே மதுரையில் இருந்து வாங்கி வந்த stationaries கொண்டு, அவர் தந்த இடத்தில் கடை போட்டு லாபம் பார்த்தது.

3. சுயமாக வேலை தேடி சென்னை வந்தபோது carewell homes என்ற கம்பெனியில், என்னென்னவோ வேலையெல்லாம் பார்த்தது.(கேபிள் டிவி புதிதாக வந்த காலம் அது. kadar Nawaz Khan ரோட்டிலிருந்த ஒரு பங்களா வீட்டில் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப் போனபோது, அங்கிருந்த சேச்சி, கனெக்ஷன் கொடுக்கணும் என்று ரொம்ப உள்ளே கூட்டிக் கொண்டு போக அரண்டு போய் ஓடி வந்து, சீக்கிரமே வேலையை விட்டு விட்டேன்)

4. 1992 முதல் இன்று வரை வட இந்தியா முதல், மலேசியா வரை பல இடங்களில் எலக்டிரிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் வாழ்க்கை நடத்துவது!


Four movies I would watch over and over again:

1. சதி லீலாவதி (அட..நம்ம பாலு மகேந்திரா எடுத்ததுங்க!)
2. முதல் மரியாதை
3. தர்மத்தில் தலைவன்
4. தில்லானா மோகனாம்பாள்
(இங்கிலீஷ் படமெல்லாம் நமக்கு அம்புட்டு புரியாதுங்கோ...)


Four places I have lived (for years):

1. எண்ணூர் ( கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகில் )
2. ராயப்பன்பட்டி ( St.Aloysious Hr.Sec.School Hostel )
3. பொள்ளாச்சி ( Nachimuthu Polytecnic - இறந்துபோன லட்சுமனன் காதலித்த அஜிதா நீ எங்க இருக்க?)
4. வாரணாசிக்கு பக்கத்தில் அன்பாரா, மலேசியாவின் காப்பார் மற்றும் 10 வருடத்திற்கு மேலாக சிங்கப்பூர்.


Four TV shows I love to watch:

1. ஹார்ஷா போக்ளே வர்ற show எல்லாம்
2. மெட்டி ஒலி ( முதல் நாள் பார்த்துமே சொன்னேன் - இது நிச்சயம் வெற்றி பெறும்னு! )
3. அது மட்டும் ரகசியம் ( சமீப காலத்தில் ஜவ்வடித்த போதும்.. ரசிக்கிறேன்!)
4. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரலில் தில், தில், மனதில் (படைப்பவர் - சிங்கப்பூர் "ரவி பெர்னாட்" கலைச்செல்வன்)


Four places I have been on vacation:

1. சின்ன வயசில இருந்து அடிக்கடி - சுருளித்தீர்த்தம்
2. மலேசியாவின் பிரேசர் ஹில்
3. அதே மலேசியாவின் பங்கோர் தீவு
4. இந்தோனேசியாவின் பாதாம் தீவு


Four of my favourite foods:

1. அதாங்க .. சிக்கன் பிரியாணி
2. இரவென்றால் - சப்பாத்தி
3. முன்னாடியெல்லாம் இடியாப்பம்... இப்போ புட்டு
4. தக்காளி சாதம்


Four sites I visit daily:

1. www.cricinfo.com
2. http://us.rediff.com
3. www.its.uci.edu/~jaykay/leander.html
4. www.thamizmanam.com


நான் tag செய்ய நினக்கும் 4 பேரை ஏற்கனவே மற்றவர்கள் tag செய்திருக்கக் கூடும் என்பதால், tag செய்வதை தவிர்த்து விடை பெறுவது உங்கள் , உங்கள் , உங்கள் ..........................

10 comments:

Unknown said...

//பொள்ளாச்சி ( Nachimuthu Polytecnic - இறந்துபோன லட்சுமனன் காதலித்த அஜிதா நீ எங்க இருக்க?)//

அஜிதா எங்கே இருக்கேனு நேரடியா கேட்க வேண்டியது தானே? எதுக்குங்க செத்துப்போன லட்சுமனனையெல்லாம் துணைக்கு அழைக்கறீங்க? செத்துப்போனவர் எங்கே வந்து உண்மையெல்லாம் சொல்லப்போகிறார்னு தைரியமா? ;)

Four sites I visit daily:
1. www.cricinfo.com = same like me!

பாலு மணிமாறன் said...

லட்சுமனன் என்ற நண்பனைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் 1990 களில் இறுதியில் ஒரு சிறுகதையே எழுதி இருக்கிறேன் நண்பரே... வாழ்க்கை நெடுக புன்னகை சுமந்து, மனம் நிறைய வேதனை சுமந்து, முற்றுப் புள்ளியாக முடிந்து போன கேள்விக்குறி அவன்.

கிரிக்கெட் என்ற விளையாட்டு சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பிரபலமாகாத 19980களின் துவக்கத்தில், ராயப்பன்பட்டியில், தச்சர் செய்து தந்த பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாடியது இன்னொரு பழைய ஞாபகம்.

"ஞாபங்கள் மழையாகும், ஞாபகங்கள் குடையாகும்...
ஞாபகங்கள் தீமூட்டும், ஞாபகங்கள் நீரூற்றும்... "

Unknown said...

//வாழ்க்கை நெடுக புன்னகை சுமந்து, மனம் நிறைய வேதனை சுமந்து, முற்றுப் புள்ளியாக முடிந்து போன கேள்விக்குறி அவன்.//

Ithai padikaiyilley manasu ennamo seiyuthu boss

அனுசுயா said...

/மெட்டி ஒலி ( முதல் நாள் பார்த்துமே சொன்னேன் - இது நிச்சயம் வெற்றி பெறும்னு! )/

நானும் அப்படித்தான் நினைத்தேன்.

பொன்ஸ்~~Poorna said...

இது என்னங்க tagging? எல்லா blogs-லெயும் இந்த மாதிரி சொல்றீங்க?

ஒரு கொசுறு கேள்வி: நீங்க, நவீன், நிலவு நண்பன் எல்லம் ஒரே கல்லூரியா?

பாலு மணிமாறன் said...

I am not sure about Naveen , Nilavu Nanban ... Your question makes me curious.. i must check :)))

Premalatha said...
This comment has been removed by a blog administrator.
பாலு மணிமாறன் said...

ராயப்பன் பட்டி என்ற கரம் பல பேருடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்திருக்கிறது. அதில் நானும் ஒருவன். உங்கள் ஊர் கோம்பை என்று நினைக்கிறேன். அங்கிருந்து ஒரு அக்கா அதே ராயப்பன்பட்டி பள்ளியில் என்னோடு படித்தார்கள். அவர்களுக்கு ஒரு கதை இருக்கிறது. அதைப் பற்றி எழுத வேண்டுமென்ற நினைப்பை உங்கள் பின்ன்னூட்டம் ஏற்படுத்தி இருக்கிறது.

சீக்கிரமே எழுதுவேன்..:)) நன்றி பிரேமலதா.

Only kamal will have the guts to act with KOVAI sarala and make it a success. Hats off to him !

Premalatha said...

Hi,

I was born and brought up in kombai, but my father's place is rayappanpatti and my fatherside folks lived there. My chiththappa still lives there. He also moved to Periyakulam later, so I am not sure where spends time most.

We still have our house there (gain if chiththappa has not sold it yet).

Premalatha said...
This comment has been removed by a blog administrator.