1. இன்றைய தமிழக, இந்திய அரசியலுக்கு புரையோடிப்போன பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்ட புதிய சிந்தனையாளர்கள் தேவை. கனிமொழி - புதுச்சிந்தனையாளர்
2. அரசியலுக்கு வரச் சரியான, இளமையின் உச்ச வயது அவருக்கு. இளமையின் வேகமும், இதுவரை பெற்ற அனுபவங்கள் தந்த விவேகமும் சரி விகிதம் கலந்த வயதில் இருக்கிறார். இதுவே சரியான சமயம்.
3. இந்தியப் பொருளாதாரம் புதுப் பாய்ச்சலில் போகத் துவங்கியிருக்கும் இன்றைய சூழலில், திறன்மிக்க நிர்வாகிகளைக் கொண்ட மாநிலங்களையே உலக நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன. கனிமொழிக்கு சிறந்த நிர்வாகியாகின்ற தகுதிகள் இருக்கிறது.
4. கனிமொழியை தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக, புதுச்சிந்தனை சார் இளம் பெண்கள் பார்க்கிறார்கள். பெரியவர்களும் மதிக்கிறார்கள்.
5. கல்வியும், கவிதாச் சிந்தனையும், அடக்கமான பொருள் பொதிந்த பேச்சும், செயலும் வழக்கமான ஆரவார அரசியல்வாதிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.
6. அரசியல்வாதிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்திருப்பது, அவரது பலம். சிலர் அதை பலவீனமாகக் கருதலாம். ஆனால், அரசியல் செல்வாக்கை தனது சுயஆதாயத்திற்காக பயன்படுத்தினதாகச் சொல்லும் எந்த சுட்டுவிரலும் அவரை நோக்கி இல்லை.
7. அடக்கமானவர்தான், அமைதியானவர்தான். ஆனால் பலமற்றவரல்ல என்பதை கலைஞர் கருணாநிதி கைது சம்பவத்தின்போது உலகம் உணர்ந்து கொண்டது. தனது கருத்துகளுக்காக போராடும் போர்க்குணம் கனிமொழிக்கு இருக்கிறது.
8. வானில் பறப்பதற்க்கான வாய்பிருந்தும், தரையில் காலூன்றி நிற்கும் கனிமொழியின் இயல்பு, ஊழலற்ற நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படை குணம். அது அவரால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளமிட முடியும் என்று உறுதியளிக்கிறது.
9. சில ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசம், அவருக்கு உலகின் புதிய கதவுகளை திறந்து காட்டியிருக்கிறது. ஒரு தலைவன் திறமையானவனாக, திடமானவனாக இருத்துவிட்டால் எதுவெல்லாம் சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்திருப்பதால், அது அவரது அரசியலில் எதிரொலிக்கும்.
10. ஒரு புகழ் பெற்ற தலைவரின் மகளாக இருந்தும், கனிமொழிக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. சுயம் உள்ளவர்களே வெற்றிகரமான தலைவராக விளங்கினாரகள், விளங்குகிறார்கள் என்பது சரித்திரம். வாய்ப்பிருந்தால், கனிமொழியும் ஒரு சரித்திரமாகலாம்!
9 comments:
mu.ka vin pillaigalil onravadhu
samooga sindhanaiyalaraga iruppadhu
pidikkavillaiya.......arasiyal sagadhi kku avaraiyum izhukkadheergal
She can come to politics. We have already seen so many good & bad people in politics.
Let us see " What do really she have in her mind".
சிவஞானம்ஜி... சமூக சிந்தனையுள்ளவர்கள் அரசியலை விட்டு விலகி நிற்பதுதான் நமது பிரச்சனைகளின் அடிவேரே எனத் தோன்றுகிறது...
அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய சிலராவது வேண்டும் - அவர்களில் ஒருவராக கனிமொழி இருக்கலாம்தானே?
கனிமொழி வந்தால் அவருடைய பழைய திருமண வாழ்க்கையை எல்லாம் தூசு தட்டி எடுப்பார்கள். அதற்கு அவர் சும்மாவே இருக்கலாம்.
இப்போதெல்லாம் மக்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடிவதில்லை கே.வி.ஆர்!
போன நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்ற 40 - 0 வெற்றி அதற்கு ஒரு உதாரணம்.
ஒரு துவக்கத்திற்கு வேண்டுமானால் குடும்பப் பின்புலம் துணைநிற்கலாம். திறனற்றவர்களின் வெள்ளைச்சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்!
சரியாகச் சொன்னீர்கள் சிவப்பாலன். நாம பதிவெல்லாம் போடுறோம்.சரி. ஆனால் கனிமொழி மனசில் என்ன இருக்கோ... யார் கண்டார்?
கரெக்ட்டுதான்... நம்ம ஆளுங்க தூசு தட்டுவதிலும், தூசு கிளப்புவதிலும் மன்னர்கள்.
தூசியால் முடிகிற ஆகப்பெரிய விஷயம் தும்மல் மட்டும்தான். "அச்ச்சு" ன்னு ஒரு தும்மல் போட்டுட்டு அடுத்த வேலையை பார்த்திட்டுப் போய்க்கிட்டே இருப்பவர்கள்தான தலைவர்களாக முடியும்?
//கனிமொழி வந்தால் அவருடைய பழைய திருமண வாழ்க்கையை எல்லாம் தூசு தட்டி எடுப்பார்கள். அதற்கு அவர் சும்மாவே இருக்கலாம்.//
There is no evidence that is likely to happen. TN politics has always and surprisingly remained devoid of purely personal affairs (I don't mean the type of personal affairs such as personal wealth accumulation while in public office, but personal life such as marriage, love life etc.) coming in the way of a person's capacity to serve a public office. MGR's relationship with Jayalaitha, Jayalaitha's affairs and failed marriage, Karunanidhi's youthful indiscretions... the list goes on.. and they've never been discussed in public.
Oru Sirantha Thalaivanin kuraigalai thamizh samoogam kandu kolvathillai
Post a Comment