ஓடியே போய்விட்டது ஒருவாரம்.
மதி எனக்கும் நட்சத்திர வாரம் கொடுத்தபோது நாட்களில்லை, தயார் செய்து கொள்ளுங்கள் என்றார். தயாராயில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்ல முடிந்தாலும், சோம்பல் முன்நிற்கிறது....
போய் வருகிறேன் என்று சொல்லலாம். எங்கு போவது, எங்கு வருவது? இங்குதானே போவதும் வருவதும். உலகமெல்லாம் பரவிக்கிடக்கிற தமிழ் நெஞ்சங்களோடு கருத்துப் பகிரக் கிடைத்த வாய்ப்பாக நட்சத்திரவாரம் அமைகிறது.
அதற்கு காசி, மதி மற்றும் அவர்தம் குழுவினருக்கு அன்பு நன்றி!
பின்னூட்டமிட்டு உற்சாகமளித்த அன்பு நெஞ்சங்களுக்கு அடுத்த நன்றி!!
வாசித்த, என் வலைப்பூவில் வசித்த நேச உள்ளங்களுக்கும் நன்றி!!!
நேற்றுமுதல் சில சிக்கல்கள்.அதனால் புதுப்பதிவுகள் போட முடியவில்லை. எனினும், நிறைந்த மனதோடு விடை பெறுவது...
பாலு மணிமாறன்
5 comments:
உங்க 'ராசுவைக் கொன்ன பய' குறிப்பா மறக்க முடியாத பதிவு.//" நாந்தானே உன் அக்கா புருஷன்?"//
:-)))))
நல்லா இருந்தது உங்க நட்சத்திர வாரம்.
அன்புடன்
சாம்
நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். சென்ற வாரம் தமிழ்மண பக்கம் அதிகம் வர முடியவில்லை.உங்கள் கட்டிபுடி வைத்தியம் பதிவை முழுவதும் படித்தேன்.நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் முத்து..
தமிழினி மெல்ல வளரும்..
Nandrikal sam... its nice to know that you can still remember those things
Nadrikal Selvan... thanks for your comments
Post a Comment