பயணம் போகின்ற பாதையில் படுகின்ற விஷயங்கள் எப்போதும்
இன்ன பிற சிந்தனைக்கு இட்டுச்சென்றே விடுகின்றன
கூர்ந்து கவனியுங்கள்...
கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !
நட்புக்கும் இடைவெளிகள்
நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...
தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம்நீள
காரணமாகிறது...
தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டு
அமருவதுதான்
காதலில்கெளரவம்...
பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?
இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!
3 comments:
தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டு
அமருவதுதான்
காதலில்கெளரவம்...
என்பது இங்குள்ள யாருக்கும் புரியமாட்டெங்குதே:)
பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?
கவனித்ததுண்டா?
இந்த இடைவெளி வைத்து தான் 'சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும்' தத்துவமும் பிறந்ததோ?
மேலே சொன்னது சும்மா ஜாலிக்கு. கவிதை நல்லாயிருக்கு.
இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்பது நினைப்பாகவும், இதுதான் இப்போது இங்கே என்பது நிஜமாகவும் இருக்குதுங்க அன்பு...சந்தில் சிந்து பாடவும் இடைவெளி அவசியம் என்பதுதானே உங்கள் point விஜய் ? :)))
Post a Comment